வேலணை வேணியன் (இயற்பெயர்: வை.கங்கை வேணியன்). வேலணை: வேணியன்ஸ் அசோசியேட்ஸ், சுவையகம், 1வது பதிப்பு, மே 1987. (கொழும்பு: மெய்கண்டான் அச்சகம், 161, கடற்கரைத் தெரு).
60 பக்கம், விலை: ரூபா 25., அளவு: 19.5×13.5 சமீ.
தெய்வ நம்பிக்கை மிகுந்த கவிஞர் வேலணை வேணியன் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக சமூக, அரசியல், கலாச்சார பொது சேவைத் திட்டங்களில் தன்னை இணைத்துக்கொண்டு சேவையாற்றி வருபவர். ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவராகவும், கொழும்பு மாநகரசபை உறுப்பினராகவும் பணியாற்றியவர். தமிழ் எழுத்தாளராகவும், கவிஞராகவும், தமிழ்த் தேவாரப் பண் பாடும் சைவப்பெரியாராகவும் நன்கு அறியப்பெற்றவர் 1980களிலிருந்து தமிழ்ப் பணியாற்றிவரும் இவர் எழுதிய சைவத் தமிழ்கூறும் அருட் கவிதைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 17375).