கச்சியப்ப சுவாமிகள் (மூலம்), ச.சுப்பிரமணியம் (உரையாசிரியர்), ஆறுமுகம் கந்தையா (பதிப்பாசிரியர்). யாழ்ப்பாணம்: அஷ்டலட்சுமி பதிப்பகம், 41, கண்டி வீதி, கைதடி, 1வது பதிப்பு, ஒக்டோபர் 2000. (கொழம்பு 11: அஷ்டலட்சுமி பதிப்பகம், 320 செட்டியார் தெரு).
viii, 326 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 22×14 சமீ.
கந்தபுராணம், உற்பத்திக் காண்டம், அசுர காண்டம், மயேந்திர காண்டம், யுத்த காண்டம், தேவ காண்டம், தக்ஷண காண்டம் என்னும் ஆறு காண்டங்களாகப் பாடப்பெற்றது. 10345 செய்யுள்களைக் கொண்டது. இந்நூல் யுத்த காண்டத்திலுள்ள சூரபதுமன் வதைப்படலத்தைத் தேர்ந்து அதிலுள்ள செய்யுள்களையும் அவற்றிற்கான உரைநடை விளக்கத்தையும் வழங்குகின்றது. பாடசாலை மாணவர்களுக்கென உருவாக்கப்பட்ட இந்நூலின் உரையாசிரியர் பண்டிதர் இயற்றமிழ் வித்தகர் ச.சுப்பிரமணியம் அவர்கள் புத்தூர், ஆவரங்காலைச் சேர்ந்தவர். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 27341).