கச்சியப்ப சுவாமிகள் (மூலம்), வ.சிவராஜசிங்கம் (உரையாசிரியர்). பருத்தித்துறை: புலவர் ஆ.பொன்னையா, அல்வாய் மேற்கு, திக்கம், 1வது பதிப்பு, 1992. (யாழ்ப்பாணம்: மஹாத்மா அச்சகம், ஏழாலை).
x, 182 பக்கம், விலை: ரூபா 100., அளவு: 21×14 சமீ.
கந்தனது பெரும்புகழ் பேசும் நூல் கந்தபுராணமாகும். அப்புராணம் சித்தாந்தப் பொருள் நிறைந்த சைவபுராணமாகும். கந்தசஷ்டித் தினங்களாகிய ஆறு நாட்களிலும், சுப்பிரமணியப் பெருமான் சூரபன்மனாகிய ஆணவமலத்தின் வேகத்தைத் தணித்து அந்த ஆன்மாவுக்கு அருள்பாலித்தார். அந்த அற்புதமான கதை கந்தபுராணத்திலே சூரபன்மன் வதைப்படலத்தில் அழகாகக் கூறப்பட்டுள்ளது. இந்நூலில் செய்யுள்களை இலக்கண விதிப்படி புணர்த்திப் பதிப்பதனால் வாசிப்பதில் மக்களுக்கு ஏற்படும் இடரை நீக்கவிரும்பி கூடியவரையில் புணர்ச்சி பிரித்து உரையாசிரியர் விளக்கியுள்ளார். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 17407).