11198 கதிர்காமத்து கந்தன் பாமாலை.

க.பே.வரதராஜா. கொழும்பு 4: கதிர்காமத்தையன் பிரசுராலயம், எல் 12, 2ஆம் மாடி, அரச தொடர்மாடி மனைகள், 4வது பதிப்பு, மார்கழி 1998, 3வது பதிப்பு, 1995, 2வது பதிப்பு, தை 1995, 1வது பதிப்பு, ஜுலை 1994. (அச்சக விபரம் தரப்படவில்லை).

24 பக்கம், விலை: ரூபா 20., அளவு: 22×14 சமீ.

இந்நூலில் ஆசிரியர் முருகனைப் பற்றிப் பாடிய நான்கு வரிக் கந்தன் கவிதைகள் நூறு பக்திப் பாமாலையாகிப் பக்தர்களைப் பக்திப் பரவசத்தில் ஆழ்த்துகின்றன. இப்பாமாலையில் அருணகிரிநாதரின் திருப்புகழ்களும் யோகர் சுவாமிகளின் பாடல்களும், முருகதாஸ் சுவாமிகளின் பாடல்களும் சேர்க்கப்பட்டுள்ளன. முத்தமிழால் வைதாரையும் வாழவைக்கும் முருகன் மேல் பக்திகொண்டு கதிர்காமத்தானைத் துதித்துப் பாடிய பாமாலை இது. பிள்ளையார் காப்புடன் ஆரம்பமாகும் கந்தன் பாமாலை, முருகனைப் பல்வேறு திருநாமங்களாலும் விழித்துப்பாடுவதாக உள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 34944).

ஏனைய பதிவுகள்