செ.தனபாலசிங்கன். கொழும்பு 6: செ.தனபாலசிங்கன், 17, 55ஆவது ஒழுங்கை, வெள்ளவத்தை, 1வது பதிப்பு, 1976. (சுன்னாகம்: திருமகள் அழுத்தகம்).
xxxiv, 272 பக்கம், விலை: ரூபா 10., அளவு: 18.5×12.5 சமீ.
கந்தபுராணம் பற்றிய அறிவையும், அதனுள் நுழைந்து அனுபவிக்கும் இன்பம் பற்றிய ஆர்வத்தையும்; தூண்டும் வகையில் எழுதப்பட்ட கட்டுரைகள் இவை. கந்தபுராணம் கற்பக தரு, மன்மதனின் தர்மசங்கடம், பார்வதி திருக்கல்யாணம், நம்முன் நிற்கும் வினாக்கள், காதற் கல்யாணம் – விதியின் விளையாட்டு, ஒளவையாரின் மூன்று சொற்கள், அடாதன செய்தார் படாதன படுவார், நாம் தேடிய சொத்துக்கள், உயிர்ப்பிச்சை தந்தேன் பிழைத்துப்போ, வீரக்குரல் அறக்குரல், உண்மையான உறுதியான காதல், ஆண்டவன் படைக்க முடியாத பொருள், காலத்தாற் சிதையாத கருத்து, மகாத்மா ஆகலாம், ஆம் இதுதான் விதி, வாழ வழிகாட்டும் ஒரு பாடல், மனம் துடித்தது: மானம் தடுத்தது, நலம் பயக்கும் வளமான போர், தெய்வயானை அம்மை திருமணம், சர்ச்சை வேண்டாம், அற்புதமான தத்துவங்கள், திருநெறியின் சங்கநாதம், உயர்வு தரும் கதை, வாழ்வு வளம் பெறும்: உயிர் உரம் பெறும், கடவுளுக்கும் கையூட்டு, அழிக்க முடியாதது, காதலினால் கவலைபோகும், இது எவ்வளவு அறியாமை, வாழும்-வளரும், நான் யார், அன்பே சிவம், அறிவுக்குப் பொருந்தும், சிந்தை தெளிந்திடும் செம்மை பிறந்திடும், தோத்திரம் ஆகிய தலைப்புகளில் எழுதப்பட்ட ஆசிரியரின் 34 ஆன்மீகக் கட்டுரைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 10204).