மு.தியாகராசா (விளக்கவுரை). கொழும்பு 4: இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம், 248, 1/1 காலி வீதி, 1வது பதிப்பு, நவம்பர் 2001. (கொழும்பு 11: அனுஷ் அச்சகம், 271/5, செட்டியார் தெரு).
viii, 102 பக்கம், விலை: ரூபா 100., அளவு: 21×14.5 சமீ.
கந்தபுராணத்தின் மிக முக்கியமான படலமாகக் கருதப்படும் வள்ளியம்மை திருமணப்படலம் பாடல்களுக்குரிய பொருள் விளக்கத்தோடு நூல்வடிவில் திணைக்களத்தின் வெளியீடாக வெளியிடப்பட்டுள்ளது. முருகப்பெருமான் வள்ளியை மணம்புணர்ந்த வரலாற்றை இப்புராணப்பகுதி விதந்துரைக்கின்றது. சிவமுனிவனான திருமாலுக்கும் மானுருக்கொண்ட திருமகளுக்கும் பிறந்த வள்ளி, வேடுவத் தலைவனான நம்பியரசனால் வளர்க்கப்பட்டவள். பின்னர் கிழவுருத் தாங்கி வந்த முருகன் வள்ளியைத் திருமணஞ் செய்தான் என்கின்றது புராணம். இது புராண வித்தகர் திரு.மு.தியாகராசா அவர்களின் விளக்கவுரையுடன் கூடிய நூல். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 31139).