11206 கந்தர் மாவை வெண்பா.

மா.குமாரசாமி. மாவிட்டபுரம்: மாவை ஆதீனம், 1வது பதிப்பு, ஏப்ரல் 1988. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ், 48B, புளுமெண்டால் வீதி).

28 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×14 சமீ.

சுன்னாகம் மயிலணி சைவ மகாவித்தியாலய முன்னாள் அதிபரும், காலஞ்சென்ற சுன்னாகம் சைவப் பிரசாரகர் குரு.சி.மாணிக்கத் தியாகராஜ பண்டிதர் அவர்களின் புத்திரனுமாகிய மாவையாதீன வித்துவான் செஞ்சொற் புலவர்- பண்டிதர் திரு.மா.குமாரசாமி அவர்கள் இயற்றிய வெண்பா வடிவிலான பக்தி இலக்கியம். மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவில் இலங்கையின் வடபகுதியில் யாழ்ப்பாணம் காங்கேசந்துறை வீதியில் யாழ்ப்பாண நகரிலிருந்து சுமார் ஒன்பது மைல்கள் தொலைவிலுள்ள ஒரு பழமை வாய்ந்த முருகன் கோயில் ஆகும். இலங்கையில் காணப்படும் சைவ சமயத்துத் திருத்தலங்களில் மிகவும் பழமையும் தொன்மையும் வாய்ந்த திருத்தலமாக மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவில் காணப்படுகிறது. மாருதப்பிரவீகவல்லி எனும் சோழ இளவரசி முருகப்பெருமானை வழிபட்டு வரும் காலத்தில் முருகன் அருளால் அவள் குதிரை முகம் நீங்கி மகா பேரழகு பெற்றதாக வரலாறு கூறுகிறது. அதன் காரணத்தால் இவ்வூருக்கு மாவிட்டபுரம் (மா ூ விட்ட ூ புரம்) என்ற பெயர் ஏற்பட்டது என்பது ஐதீகமாகும். இதன் காரணமாக மகிழ்ச்சியடைந்த இளவரசி மதுரையில் இருந்து ஆலயத்தை நிர்மாணிப்பதற்காக சிற்பாசிரியர்களையும் பொருட்களையும் கொண்டுவந்து மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்தை நிர்மாணித்தார் எனவும், விக்கிரகங்கள் உரிய முறையில் பிரதிஸ்டை செய்யப்பட்டு கி. பி. 1795 ஆம் ஆண்டு ஆனி உத்திர நட்சத்திரத்தில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றதெனவும் கோவில் வரலாறு கூறுகின்றது. இத்தகு சிறப்புமிக்க மாவை முருகன்மீது பாடப்பெற்றதே மாவை வெண்பா. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 34944).

ஏனைய பதிவுகள்

Risikoleiter Erläuterung Für Den Gewinn 2022

Content Durchlauf Via Freunden! Weitere Games Im Sonnennächster planet Spieleportfolio Die Spezialitäten Der Hydrargyrum On Unter umständen finden Diese auch einen Slot Spielsaal Prämie exklusive

Boomanji Slot

Articles To play At the Scientific Video game Sites Betting Local casino | Heypoker casino Choices for Wonderland Casino games Consider The new Unpredictability And