செ.இரத்தினப்பிரகாசம் (பதிப்பாசிரியர்). கொக்குவில்: கிருபாகர சிவசுப்பிரமணிய சுவாமி கோவில் (புதுக்கோவில்), 1வது பதிப்பு, ஜுன் 1990. (கொக்குவில்: சோதிடப்பிரகாச யந்திரசாலை).
134 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24×18 சமீ.
செ.இரத்தினப்பிரகாசம் அவர்களின் பதிப்புரையுடன் தொடங்கும் இந்நூலில் சித்திவிநாயகர் ஒருபாவொரபஃது, சித்திவிநாயகர் திருவூஞ்சற் பதிகம், கொக்கூர்க் கிருபாகர சிவசுப்பிரமணியார் பதிற்றுப் பத்தந்தாதி (செ.வேலாயுதபிள்ளை), கொக்கூர் ஸ்ரீ தண்டபாணி விருத்தம், கொக்கூர் ஸ்ரீ முத்துக்குமாரசுவாமி ஊசல்-எச்சரீக்கை-கீர்த்தனங்கள் (உ.வே.சாமிநாதையர்), கொக்கூர் புதுக்கோவில் வேணுகோபாலன் திருவூஞ்சல் (அ.நாகலிங்கம்), ஓமையந்தாதி (சி.சிலம்புநாதபிள்ளை), வேணுகோபாலர் மீது பாடிய ஒருபா ஒரபஃது ஆகிய திருப்பாடல்கள் இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. இந்நூல் 1990 வைகாசி மாதம் 24ம் திகதி கோவிலில் நடைபெற்ற இரதோற்சவத்தன்று வெளியிடப்பட்டது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 13702).