செ.வேலாயுதபிள்ளை (மலர் ஆசிரியர்), செ.இரத்தினப்பிரகாசம் (பதிப்பாசிரியர்). கொக்குவில்: கிருபாகர சிவசுப்பிரமணிய சுவாமி கோவில் (புதுக்கோவில்), 1வது பதிப்பு, பெப்ரவரி 1994. (கொழும்பு 2: வெட் பிரின்ட்).
(10), 58 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24 x 18.5 சமீ.
செ.வேலாயுதபிள்ளை அவர்களின் முன்னுரையுடன் வெளியிடப்பட்டுள்ள இந்நூலில் இடம்பெற்றுள்ள முதல் ஐந்து பாக்களுமான கொக்கூர்ச் சித்திவிநாயகர் கலிவெண்பா: அரும்பதவுரையும் விளக்கக் குறிப்பும், கொக்கூர் குமரன் திருவெழு கூற்றிருக்கை: விளக்கக் குறிப்புகள், கொக்கூர்க் குமரன் நவமணிமாலை, கொக்கூர் சித்திவிநாயகர் தோத்திர பஞ்சம், கொக்கூர் முருகன் அட்டகம்: அரும்பத விளக்கம் ஆகியவை செ.வேலாயுதபிள்ளையினால் இயற்றிப் பாடப்பெற்றவை. தொடர்ந்து வரும் கொக்கூர்க் குமர கிருபாகரர் அருள்வேட்டல்: பஞ்சகம் (மு.சின்னத்தம்பி), குருவருள் வேண்டல் (அ.நாகலிங்கம்), கொக்கூர்ச் சிவசுப்பிரமணியர் கலிவெண்பா: விளக்கக் குறிப்புகள் (செ.வேலாயுதபிள்ளை), எட்டிகுடியேசல் (ஓர் பழம் பாடல்), திருமுருகன் தாண்டகம் (த.கிருஷ்ணபிள்ளை), புதுக்கோயில் இலச்சினை விளக்கம் (செ.வேலாயுதபிள்ளை) ஆகியவை உள்ளிட்ட 11 பாடல்கள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. 12.2.1994 அன்று வெளியிடப்பெற்ற இந்நூலின் முதற் பதிப்பு 07.06.1990 இல் வெளியிடப்பட்டது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கங்கள் 13703/34630).