ச.சுப்பிரமணியம். புத்தூர்: பண்டிதர் ச.சுப்பிரமணியம்,ஆசிரியர், அவரங்கால், 1வது பதிப்பு, ஆண்டு விபரம் தரப்படவில்லை. (கொழும்பு 11: ஸ்டான்கார்ட் பிரிண்டர்ஸ்).
8 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 13.5×10.5 சமீ.
கொழும்பு ஸ்ரீ முத்துவிநாயகர் தேவஸ்தானத்தின் சார்பில் வெளியிடப்பட்ட பக்தி இலக்கியம். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 24632).
11214 கொழும்பு வெள்ளவத்தை சம்மாங்கோட்டார் ஸ்ரீ மாணிக்க விநாயகர் திருப்பள்ளியெழுச்சி – தோத்திரப் பாமாலை.
சி.விநாசித்தம்பிப் புலவர். கொழும்பு: வெள்ளவத்தை சம்மாங்கோட்டார் ஸ்ரீ மாணிக்க விநாயகர் ஆலயம், 1வது பதிப்பு, ஆண்டு விபரம் தரப்படவில்லை. (அச்சக விபரம் தரப்படவிலலை).
8 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 14×10.5 சமீ.
அளவெட்டி வாழ்ந்த புலவர்களில் மிக முக்கியமான ஒருவர் விநாசித்தம்பிப் புலவர். இவரை அருட் கவியெனவும், கவியோகியெனவும், வரகவியெனவும் அறிஞர்கள் பாராட்டுவர். இவர் ஒரு புலவராக மட்டுமல்லாமல் ஒரு சோதிடராகவும், மருத்துவராகவும் பேய்பிணித் தொல்லைப் போக்கும் அருளாளராகவும் மக்களுக்கு நன்கு பயன்பட்டவர். அளவெட்டி தெற்கு அருணாசலம் வித்தியாசாலையில் தமிழும் அளவெட்டி ஆங்கில பாடசாலையில் ஆங்கிலமும் கற்றவர். ஆரம்பத்தில் கூட்டுறவுச்சங்கக் கடையொன்றில் கடமையாற்றினார். பின்னர் மலை நாட்டிலுள்ள பாடசாலையொன்றில் ஆசிரியராகவிருந்தார். அதன் மேல் திருநெல்வேலி சைவாசிரிய கலாசாலையிற் பயிற்சி முடித்து பூரணத்துவம் வாய்ந்த ஆசிரியராக மலர்ந்தார். வெள்ளவத்தை சம்மாங்கோட்டார் ஸ்ரீ மாணிக்கவிநாயகர் மேல் இவர் பாடிய பக்திப் பாமாலை இதுவாகும். கையடக்கப் பதிப்பாக வெளியிடப்பட்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 10197).