யாமினி சிவராமலிங்கம். வவுனியா: சக்திப்ரதா வெளியீடு, குடியிருப்பு, 1வது பதிப்பு, 2001. (வவுனியா: மல்ரிவிஷன் அச்சுக் கலையகம், 2ம் குறுக்குத்தெரு).
72 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 35., அளவு: 13.5×9.5 சமீ.
கடவுள் பக்தி, ஆன்மீக ஞானம் என்பவற்றை வாழ்வின் அடிப்படையாகக் கொண்ட யாமினி வவுனியா குடியிருப்பு ஸ்ரீ சித்திவிநாயகப் பெருமானைக் குலதெய்வமாகக் கொண்டு வழிபடும் ஒரு சைவாசாரக் குடும்பத்தில் பிறந்தவர். தாயார் ஒரு ஆசிரியை, தந்தையார் ஒரு தபாலதிபர். கூட்டுப்பிரார்த்தனைக்கும், பஜனை வழிபாட்டுக்கும் உகந்ததாக பிரார்த்தனைப் பாடல்களை இச்சிறு நூலில் இயற்றித் தந்துள்ளார். இவரது பாடல்களில் இறைவனைத் தந்தையாகவும் இறைவியைத் தாயாகவும் சகோதரியாகவும் மனதில் இருத்திப் பாடியுள்ளார். இனிய நடையில் எளிய சொல்லாடல்களுடன் இத்தொகுப்பு அமைந்திருக்கின்றது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 22998).