ப.சிவானந்த சர்மா (புனைபெயர்: கோப்பாய் சிவம்). யாழ்ப்பாணம்: சர்வானந்தமய பீடம், ஸ்ரீநகரம், அளவோடை வீதி, இணுவில் மேற்கு, சுன்னாகம், 2வது பதிப்பு, டிசம்பர் 2015, 1வது பதிப்பு, ஜனவரி 2014. (இணுவில்: கஜானந்த் பிறின்டேர்ஸ், மானிப்பாய் வீதி, கந்தசாமி கோவிலடி).
320 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 700., அளவு: 24.5×17 சமீ.
ஒவ்வொரு இந்துக்களின் வீட்டிலும் இருக்கவேண்டியதொரு இந்து சமயக் களஞ்சியம் இது. சனாதன தர்ம நெறிமுறையில் இந்துவாக வாழ்வதற்கு வழிகாட்டும் வழிகாட்டியாகவும், தேவைப்படும் நேரத்தில் வேண்டிய தகவல்களைத் தருகின்ற களஞ்சியமாகவும் அவ்வப்போது ஏற்படுகின்ற ஐயங்களைப்போக்கும் ஆசானாகவும் அமைகின்ற இந்து சமயக் கையேடு இது. சனாதன தர்மம் இந்து சமயம் (இருப்பும் எடுப்பும்-வரலாற்றுப் பதிவுகள்), ஈடேற்றம் நல்கும் இந்து சமயம் (வணக்கமும் வழிபாடும்- சமயத்தின் அடிப்படைகள்), இல்லற வாழ்வில் இந்து சமயம் (ஆசாரமும் நெறிமுறைகளும்- வாழ்க்கை வழிகாட்டி, ஆசார விதிமுறைகள், ஆன்மீக உபதேசங்கள்), இக்கால நடைமுறையில் இந்து சமயம் (ஐயம் தெளிதல்-கேள்விகளும் பதில்களும், ஆலய தரிசனம், நித்யகர்மானுஷ்டானம், உபாசனை, நாளாந்த வாழ்வியல், ஆசௌச நடைமுறைகள்), அந்தணர்க்கு இந்து சமயம் (ஆசார ஒழுக்கங்கள்), இந்து சமய அறிவுப் பெட்டகம் (தகவல் களஞ்சியம்) ஆகிய ஆறு இயல்களை இந்நூல் கொண்டுள்ளது. பிரம்மஸ்ரீ ப.சிவானந்த சர்மா, ஸ்ரீமதி லிஜயலக்ஷ்மி தம்பதிகளின் மணிவிழாச் சிறப்பு மலராக முதற்பதிப்பு 05.01.2014இல் வெளியிடப்பட்டது.