இ.குமரகுருபரநாதன். கொழும்பு: ஈழத்துத் திருநெறித் தமிழ் மன்றம், 1வது பதிப்பு, டிசம்பர் 1992. (கொழும்பு 11: மெய்கண்டான் அச்சகம், 161, கடற்கரைத் தெரு).
viii, 42 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 18×13 சமீ.
ஆ.குணநாயகம் அவர்களைத் தலைவராகக் கொண்டியங்கிய கொழும்பு ஈழத்துத் திருநெறித் தமிழ் மன்றத்தின் பத்தாவது வெளியீடாக இந்நூல் வெளியிடப்பட்டுள்ளது. சைவத் திருமுறைகள் பல்லவர் காலத்திலும் அதன் பின்னரும் தோன்றிய சைவ சமய நூல்களின் தொகுப்பாகும். இவை திருமுறைகள் என்றும் அறியப்படுகின்றன. இவை மொத்தம் 12 திருமுறைகளாக வகுக்கப்பட்டுள்ளன. 10 ஆம் நூற்றாண்டில் இராஜராஜ சோழனின் ஆட்சியின்போது, சிதம்பரம் கோயிலிலே கவனிப்பாரற்றுக் கிடந்த திருமுறைகள் பூச்சிகளால் அரிக்கப்பட்டு அழிந்தவை போக எஞ்சியவற்றை, நம்பியாண்டார் நம்பி என்பவர் திருமுறைகளாகத் தொகுத்தார். திருமுறைகள் பழந்தமிழ் இசையையொட்டிய பண்களுடன் பாடப்பட்டு வருகின்றன. சைவக் கோயில்களிலும், சைவர்கள் வீடுகளிலும், பாடசாலை முதலிய இடங்களில், சமய நிகழ்ச்சிகளின் போதும் திருமுறைகள் இன்றளவும் பாடப்பட்டு வருகின்றன. இவை பன்னிரு திருமுறைகள் எனும் அழைக்கப்பட்டன. இத்திருமுறைகளில் பொதிந்துள்ள ஆன்மீகக் கருத்துக்களை இந்நூல் தொகுத்துத் தருகின்றது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 16641).