க.ம.செல்லத்துரை. பருத்தித்துறை: கெங்காதரன் கமலாதேவி, செந்தாமரையாள் வாசம், கரணவாய் மேற்கு, கரவெட்டி, 1வது பதிப்பு, டிசம்பர் 2007. (பருத்தித்துறை: தமிழ்ப் பூங்கா அச்சகம், நெல்லியடி).
(8), 210 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20×14.5 சமீ.
செய்யுள் வடிவில் அமைந்துள்ள இந்நூலில் மேல்கரணை கரவைப்பதி வாழ் அமரர் மயில்வாகனம் செல்லத்துரை தொகுத்தளித்த தெய்வீகப்பாமாலை இடம்பெற்றுள்ளது. நால்வர் தேவாரம், சிவபுராணம், கீர்த்தித் திரு அகவல், திருவண்டப் பகுதி, போற்றித் திருவகவல், அதிசயப்பத்து, அருட்பத்து, திருப்படையாட்சி என அறுபத்துமூன்று தலைப்புகளில் நீழும் இவை பல்வேறு சைவ அருளாளர்களால் அருளப்பட்டவை. அன்னாரது மறைவின் 31ஆம்நாள் நினைவின்போது வெளியிடப்பட்டது. 4.5.1918இல் பிறந்த மயில்வாகனம் செல்லத்துரை 27.11.2007இல் அமரத்துவமடைந்தார். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 44618).