கடவுண் மாமுனிவர் (மூலம்), சி.மருதபிள்ளை (உரையாசிரியர்). யாழ்ப்பாணம் : சைவமணி சி. மருதபிள்ளை, வட்டுக்கோட்டை, 1வது பதிப்பு, 1982. (அச்சக விபரம் தரப்படவில்லை).
196 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×14 சமீ.
கடவுள் மாமுனிவர் இயற்றிய திருவாதவூரடிகள் புராணம் 545 செய்யுட்களைக் கொண்டது. அளவில் இது சிறிய நூல். சுந்தரரும், சேக்கிழாரும் மாணிக்கவாசகரைப் பாடவில்லை. பின்னர் வந்த கடவுள் மாமுனிவர் அக்குறையைச் சரி செய்யும் வகையில் மாணிக்கவாசகர் வரலாற்றைப் பாடியதாகக் கருதுவர். சைவசித்தாந்தக் கருத்துகள் இதில் அதிகமாகக் காணப்படுகின்றன. இந்நூல் ஒரு தலபுராணமே ஆயினும் மாணிக்கவாசகரின் பெருமையைக் கூறுவதால் பெருமை பெறுகிறது எனலாம்.இது மந்திரிச் சருக்கம், திருப்பெருந்துறைச் சருக்கம், குதிரையிட்ட சருக்கம், மண் சுமந்த சருக்கம், திருவம்பலச் சருக்கம், புத்தரை வாதில் வென்ற சருக்கம், திருவடி பெற்ற சருக்கம் ஆகிய ஏழு இயல்களில் விரித்து எழுதப்பட்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 10286).