11235 நயினை முருகன் பிள்ளைத் தமிழ்.

சு.சி.கதிரவேலு. வவுனியா: சு.சி.கதிரவேலு, கலாச்சாரப் பேரவை, செட்டிகுளம், 1வது பதிப்பு, 1976. (யாழ்ப்பாணம்: விபுலானந்த அச்சகம்).

xii, 80 பக்கம், விலை: ரூபா 5., அளவு: 18×12.5 சமீ.

ஆய்வுரை, அணிந்துரை, பதிப்புரை, நூன்முகம், சிறப்புப் பாயிரம், அவையடக்கம் என்பனவற்றைத் தொடர்ந்து நயினை முருகன் பிள்ளைத்தமிழ் 10 பருவங்களாகப் பிரித்துப் பாடப்பெற்றுள்ளது. காப்புப் பருவம், செங்கீரைப் பருவம், தாலப் பருவம், சப்பாணிப் பருவம், முத்தப் பருவம், வருகைப் பருவம், அம்புலிப் பருவம்,  சீற்றிற் பருவம், சிறுபறைப் பருவம், சிறுதேர்ப் பருவம் என இது 10 பருவங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.  (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 2412).

ஏனைய பதிவுகள்