தம்பு.துரைராசா. கொழும்பு 4: திருக்கேதீச்சரம் சபாரத்தினம் சுவாமிகள் தொண்டர் சபை, திருவாசகம், 31ஏ, ஜானகி ஒழுங்கை, பம்பலப்பிட்டி, 1வது பதிப்பு, 2005. (கொழும்பு 13: லக்ஷ்மி அச்சகம், 195, ஆட்டுப்பட்டித் தெரு).
vii, 102 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 100., அளவு: 22×14 சமீ.
திருக்கேதீச்சரம் திருவாசக மடத்தின் ஸ்தாபகர் உயர்திரு சபாரத்தினம் சுவாமிகள் பற்றிய பாடல்களை முதலாவதாகவும், சைவம் வளர்த்த ஞானிகள், ரிஷிகள், மகான்களின் வாழ்வியல் செய்திகளை, அவர்களின் திருவருட்செயல்களை, ஈழத்து இந்து ஆலயங்களை சிறு குறிப்புரைகளாகவும், புகைப்படங்களாகவும், கட்டுரைகளாகவும் இந்நூலின் பிற்பகுதியில் அறிந்துகொள்ள முடிகின்றது. திருக்கேதீச்சரம் திருவாசக மடம் தாபகர் சபாரத்தினம் சுவாமிகள் தொண்டர் சபை சார்பாக அதன் செயலாளர் தம்பு துரைராஜா இத்தொகுப்பினை மேற்கொண்டுள்ளார். சபாரத்தினம் சுவாமிகள், வை.க.சிற்றம்பலம் சுவாமிகள், சுவாமி நிரஞ்சனானந்தர், பெரியானைக்குட்டி சுவாமிகள், சித்தானைக்குட்டி சுவாமிகள், நவநாதச் சித்தர், மகாதேவ சுவாமிகள், குழந்தைவேல் சுவாமிகள், சடையம்மா சுவாமிகள், அருளம்பல சுவாமிகள், போன்ற பல சித்தர் பெருமகான்கள் பற்றிய தகவல்கள் இந்நூலிலுள்ள கட்டுரைகளின் வாயிலாக அறியமுடிகின்றது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 36709).