கே.கே.கிருஷ்ணபிள்ளை. கொழும்பு: வே.பாலசுப்பிரமணியம், உரிமையாளர், கோபா மில்ஸ் லிமிடெட், 1வது பதிப்பு, 1983. (அச்சுவேலி: ராஜா அச்சகம்).
(8), 68 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14 சமீ.
இரத்மலானையில் உள்ள கொழும்பு இந்துக் கல்லூரியின் இசை ஆசிரியராகப் பணிபுரியும் இந்நூலாசிரியர் தான் அப்பாடசாலயின் தியான மண்டபத்தில் சிவகாமி அம்பாள் சமேதராக வீற்றிருக்கும் நடராஜப் பெருமான் முன்னிலையில் 19 ஆண்டுகளாக பக்திரசம் கனிந்த பாடல்களைப் பிள்ளைகளுக்குச் சொல்லிக்கொடுத்தும் அவர்களுடன் சேர்ந்து பாடியும்; பிரார்த்தனை செய்வதை வழமையாகக் கொண்டவர். மேலும் நடராஜப்பெருமான், சிவகாமி அம்பாள், கதிர்காமம், செல்வச்சந்நிதி, நல்லூர், இன்னும் ஆறுபடை வீடுகள் என அருள்பாலிக்கும் முருகப்பெருமான் மீதும் மனமுருகிப் பாடிய பாடல்களில் ஒரு பகுதியை நூலுருவில் வெளியிட்டுள்ளார். நான், எனது என்ற செருக்கற்ற உணர்வும், ஆறுதல்தரும் ஆறுமுகத் தெய்வத்திடம் முற்றாகச் சரணடைந்த செயலும், பாடல்களைப் பொருளுணர்ந்து ஓதுவார்க்குப் புலப்படும் பொருளாழமும் சொற்றிறனும் தீந்தமிழும் பக்திச்சுவையும் பாடல்களில் பரிமளிக்கின்றன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 37512).