11240 பன்முக நோக்கில் பதினொராம் திருமுறை.

க.இரகுபரன், ஸ்ரீ பிரசாந்தன் (தொகுப்பாசிரியர்கள்). கொழும்பு 4: இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம், 248, 1/1 காலி வீதி, 1வது பதிப்பு, 2017. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).

xiv, 328 பக்கம், விலை: ரூபா 800., அளவு: 22.5×15 சமீ., ISBN: 978-955-9233-45-9.

1992 முதல் இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம் ஆண்டுதோறும் ஆய்வரங்குகளை ஒழுங்குசெய்து நடத்தி வருவதுடன் அவ்வாய்வரங்கக் கட்டுரைகளைத் திரட்டி கட்டுரைகளை நூல்வடிவிலும் வெளியிட்டு வருகின்றது. அவ்வகையில் 21ஆவது ஆய்வரங்கு ‘பன்முக நோக்கில் பதினொராம் திருமுறை’ என்னும் தலைப்பில் இடம்பெற்றது. பதினொராம் திருமுறை தொடர்பான 24 கட்டுரைகளை இந்நூலில் காணமுடிகின்றது. இவற்றை தெய்வமும் தலமும், ஆளுமையும் கோட்பாடும், ஆக்கமும் அமைப்பும் ஆகிய மூன்று பிரிவுகளில் தொகுத்து வழங்கியிருக்கின்றனர். பதினொராம் திருமுறை விநாயகர் பிரபந்தங்கள் (எஸ்.கேசவன்), பதினொராம் திருமுறையில் சிவன் (நா.வாமன்), பதினொராம் திருமுறைச் சிவத்தலங்கள் (சி.ரமணராஜா), திருமுருகாற்றுப்படையில் ஆறுபடைவீடுகள் (சாந்தி நாவுக்கரசன்), தலபுராண நோக்கில் பதினொராம் திருமுறை (ச.பத்மநாபன்), திருமுருகாற்றுப்படை வெளிப்படுத்தும் முருக வழிபாட்டு முறைகள் (வ.குணபாலசிங்கம்), சூழலியல் நோக்கில் திருமுருகாற்றுப்படை (ஸ்ரீ பிரசாந்தன்) ஆகிய கட்டுரைகள் தெய்வமும் தலமும் என்ற முதற் பிரிவின்கீழ் இடம்பெற்றுள்ளன. பதினொராம் திருமுறையும் சைவசித்தாந்தமும் (சிவ மகாலிங்கம்), பட்டினத்துப் பிள்ளையார் உலகியலும் இறையுண்மையும் (நா.ஞானகுமாரன்), நம்பியாண்டார் நம்பியின் சமய நோக்கு (தி.செல்வமனோகரன்), சேரமான் பெருமாள் நாயனாரின் பக்திநலம் (ஏ.என்.கிருஷ்ணவேணி), நக்கீரதேவ நாயனாரின் சமயநோக்கு (சுகந்தினி ஸ்ரீமுரளிதரன்), காரைக்கால் அம்மையாரும் அவரது திருப்பதிகங்களும் (பெருமாள் சரவணகுமார்), காரைக்கால் அம்மையாரின் முத்திக்கோட்பாடு (பொ.சந்திரசேகரம்), பட்டினத்தார் பாடல்களில் அறம் (வி.பவநேசன்), ஆகிய கட்டுரைகள் ஆளமையும் கோட்பாடும் என்ற இரண்டாவது பிரிவின்கீழ் இடம்பெற்றுள்ளன. பதினொராம் திருமுறையில் திருவிரட்டைமணிமாலைகள் (துரை.மனோகரன்), பதினொராம் திருமுறை மும்மணிக் கோவைகள் (றூபி வலன்ரீனா பிரான்சீஸ்), பதினொராம் திருமுறையில் அந்தாதி இலக்கியங்கள் (செல்வரஞ்சிதம் சிவசப்பிரமணியம்), பதினொராம் திருமுறையில் கலம்பகம் (எம்.எம்.ஜெயசீலன்), யாப்பியல் நோக்கில் பதினொராம் திருமுறை (ஈஸ்வரநாதபிள்ளை குமரன்), பதினொராம் திருமுறை அமைப்பு முறையும் நோக்கும் (செ.யோகராசா), பதினொராம் திருமுறைத் தொகுப்பும் பதிப்பும் (ம.நதிரா), பதினொராம் திருமுறையில் இலக்கிய உத்தி (சோ.பத்மநாதன்), காரைக்கால் அம்மையார் பதிகங்களின் பெயர் குறித்து நிலவும் தவறான புரிதல் (க.இரகபரன்) ஆகிய கட்டுரைகள் ஆக்கமும் அமைப்பும் என்ற இறுதிப் பிரிவின்கீழ் இடம்பெற்றுள்ளன.

ஏனைய பதிவுகள்