வி.விசுவலிங்கம். களுவாஞ்சிக்குடி: களுவாஞ்சிக்குடி பிரதேச கலாசாரப் பேரவை, 1வது பதிப்பு, மார்ச் 1988. (மட்டக்களப்பு: புனித செபஸ்தியார் அச்சகம்).
72 பக்கம், விலை: ரூபா 10.00, அளவு: 17.5×12.5 சமீ.
மண்டூர் முருகன்மேல் பாடிய பிள்ளைத்தமிழ். மண்டூர் முருகனைப் பிள்ளையாகக் கண்டு காப்புப் பருவம், செங்கீரைப் பருவம், தாலப் பருவம், சப்பாணிப் பருவம், முத்தப் பருவம், வாரானைப் பருவம், அம்புலிப் பருவம், சிறுபறைப் பருவம், சிற்றிற் பருவம், சிறுதேர்ப் பருவம் ஆகிய பத்து அத்தியாயங்களில் பிள்ளைத்தமிழ்ச் செய்யுள்கள் தரப்பட்டுள்ளன. மண்டூர் கந்தசுவாமி கோயில் இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு நகரின் தெற்கே சுமார் 20 மைல்கள் தூரத்தில் மண்டூர் கிராமத்தில் மட்டக்களப்பு நீர்ப்பரப்பை ஒட்டி அமைந்துள்ள ஒரு தொன்மை வாய்ந்த முருகன் கோவில். இது தில்லை மண்டூர் அல்லது சின்னக் கதிர்காமம் என்றும் சிறப்பாக அழைக்கப்படுகிறது. இக்கோவில் 1215-1248 காலப்பகுதியில் கட்டப்பட்டது. கோவில் அமைப்பு கதிர்காமம் போன்று அமைந்துள்ளது. வெளி முற்றத்தில் இரண்டு சிறிய கோயில்கள் உள்ளன. ஒன்று தெய்வயானைக்கும் மற்றையது வள்ளிக்கும் ஆகும். பிள்ளையார், மற்றும் நாகதம்பிரானுக்கும் கோயில்கள் உள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 12884).