சரவணையூர் ஆ.தில்லைநாதப் புலவர். வேலணை: ஆ.தில்லைநாதப் புலவர், சரவணை, 1வது பதிப்பு, 1961. (யாழ்ப்பாணம்: ஸ்ரீ லங்கா அச்சகம், 234, காங்கேசன்துறை வீதி).
18 பக்கம், விலை: ரூபா 1.00, அளவு: 21×14 சமீ.
சரவணையூர் ஆறுமுகம் தில்லைநாதப் புலவர் நமசிவாயம் என்ற நாகலிங்க உபாத்தியாயரிடமும், தம்பு உபாத்தியாரிடமும் பாடங்கேட்டவர். இவர் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளைகளின் கற்பனை வளம் நிறைந்த பாடல்களில் திளைத்து, அவற்றினை அடியொற்றிப் பல செய்யுட்களை ஆக்குந் திறமை பெற்றிருந்தார்.
யமகம், திரிபு, அந்தாதி, சித்திரக் கவிகளை அநாயாசமாக இயற்றிக் கொண்டிருப்பார்.
தில்லை, நல்லூர், கதிர்காமம், நயினை முதலிய தலங்கட்கும் தீவுப் பகுதியில் உள்ள கோவில்கள் பலவற்றிற்கும் இவர் பதிகங்கள் பாடியுள்ளார். ஆங்காங்கு சில தனிப்பாடல்களையும் நிந்தாஸ்துதியாகப் பாடியுள்ளமை சிறப்பாகும். இவர் இயற்றிய பிரபந்தங்களைத் தொகுத்து யாழ். இலக்கிய வட்டம் பிரபந்தத் திரட்டு என்ற காத்திரமான நூலொன்றினை வெளியிட்டுள்ளது. இவரைப் பாராட்டிப் பொன்னாடை போர்த்துப் பொற்கிழி வழங்கிய விழா வொன்றினை வேலணைப் பாரதி இளைஞர் கழகம் 1968 இல் எடுத்திருந்தது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 2425).