முருகேசு சவுந்தரசண்முகநாதன். வட்டுக்கோட்டை: நாகமுத்து முருகேசு குடும்பத்தினர், மூளாய் வீதி, 1வது பதிப்பு, பெப்ரவரி 1995. (அச்சக விபரம் தரப்படவில்லை).
12 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20×14 சமீ.
பிட்டியம்பதி சங்கரத்தையில் ஓர் புண்ணியபூமி. இது சங்கரர் வழிவந்த பெருமையினார் பரம்பரைக்குரியது. இப்பதியில் அன்றுதொட்டு இன்றுவரை ஒரு புளிய விருட்சம் நின்று வருகின்றது. இவ்விருட்சத்தில் பறவைகள் கூடியிருந்து சுற்றியுள்ள நிலங்களின் விளைபொருட்களை அழித்துவந்தன. அதனை முன்னோராகிய முதன்மையினர் கண்டு அவ்விருட்சத்தை வெட்டி வீழ்த்த எண்ணிய அக்காலத்தில், வட்டுக்கோட்டையில் கிறிஸ்தவ ஆலயம் கட்டும் வேலையில் ஈடுபட்டு நின்ற தச்சன் ஒருவனை அழைத்து அவ்விருட்சத்தைத் தறிக்கும்படி ஏவினர். அவன் அதை மறுத்தும் கேளாது தானே அவ்வேலையைச் செய்ய முயன்றார். அப்போது ஒரு நாக சர்ப்பம் அவரை எதிர்த்துத் துரத்தியது. துரத்தவே ஓடி இழைத்து ஓர் பனைமர நிழலில் நின்றார். அந்நாகம் சற்று தொலைவில் தலைதூக்கி ஆடி நின்றது. இதைக் கண்ட பெரியார் தாம் அபசாரம் செய்துவிட்டதை நினைந்து வருந்தித் தமது இல்லம் மீண்டார். அன்றிரவே அழகுமிக்க அம்மை அவர் கனவில் தோன்றி தனக்கு அவ்விடத்தில் ஓர் நிழல் இயற்றும்படி கூறி மறைந்தார். இந்நிழலிலே இன்று வளர்ந்து நாம் காணும் பிட்டியம்பதியில் கோவில் வடிவம் தோன்றியது என்பது ஓர் கர்ணபரம்பரைக் கதை. இக்கோவிலில் எழுந்தருளியிருக்கும் பத்திரகாளி சமேத வீரபத்திரர் பேரில் பாடப்பெற்ற பாமாலைகளின் தொகுப்பு இந்நூலாகும். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 29023).