சிவ.பஞ்சாட்சரக் குருக்கள். யாழ்ப்பாணம்: அருணாசலம் அத்தியார், அதிபர், சைவப்பிரகாச வித்தியாசாலை, நீர்வேலி, 1வது பதிப்பு, ஆவணி 1931. (பருத்தித்துறை: சரஸ்வதி யந்திரசாலை).
(10), 22+22 பக்கம், தகடுகள், விலை: சதம் 15., அளவு: 21×14 சமீ.
யாழ்ப்பாணம் வல்லிபுரத்தில் கோயில் கொண்டெழுந்தருளியிருக்கும் ஸ்ரீ மாயவப் பெருமானின் பேரிற் பாடப்பெற்ற பக்தி இலக்கியம். இவை யாழ்ப்பாணம் நீர்வேலிச் சைவப்பிரகாச வித்தியாசாலை அதிபராகிய ஸ்ரீமான் அருணாசலம் அத்தியார் அவர்களின் வேண்டுகோளின்பேரில் புலோலி கிழக்கு பிரமஸ்ரீ சிவ பஞ்சாட்சரக் குருக்கள் அவர்களால் இயற்றியருளப்பெற்றது. வல்லிபுர ஆழ்வார் கோவில் வடமராட்சிப் பகுதியில் பருத்தித்துறைப் பிரதேசத்தில் அமைந்துள்ளது. துன்னாலை, புலோலி, வராத்துப்பளை, கற்கோவளம் ஆகிய கிராமங்களுக்கு அணி சேர்க்கும் முகமாக இக்கிராமங்களுக்கு மத்தியில் இக்கோவில் அமைந்துள்ளது. பருத்தித்துறையில் இருந்து கிட்டத்தட்ட 4 மைல் தொலைவில் இக்கோவில் உள்ளது. ஆர்ப்பரிக்கும் கடலோசை, வெள்ளை மணற்பரப்பு, பசுமையைக் கொடுக்கும் விருட்சங்கள் என்று இயற்கை அன்னை அரவணைக்கும் ஒரு கோவிலாக ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் கோவில் விளங்குகிறது. வரலாற்றுப் பெருமை கொண்ட இவ்வாலயம் மூர்த்தி தலம், தீர்த்தம் ஆகிய மூன்றும் ஒருங்கமையப்பெற்ற புராதன தலமாகும். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 25452).