11259 ஸ்ரீதேவி கருமாரி அம்மன் அந்தாதி மாலை.

நீர்கொழும்பு ந.தருமலிங்கம். நீர்கொழும்பு: ந.தருமலிங்கம், 195, கடற்கரை வீதி, 1வது பதிப்பு, மார்கழி 2000. (கொழும்பு 13:  லக்ஷ்மி அச்சகம், 195, ஆட்டுப்பட்டித் தெரு).

80 பக்கம், விலை: ரூபா 90., அளவு: 18×12 சமீ.

ஸ்ரீ கருமாரி அம்மன்மேற் பாடப்பெற்ற அந்தாதி வகை பக்தி இலக்கியம் இதுவாகும். தேவி கருமாரியம்மன் சூரியக்கடவுளுக்குக் குறி சொல்வதற்காகச் சென்றதாகவும், அவரை அடையாளம் காணாத சூரியக்கடவுள் உரிய மரியாதை தராமல் அவரை அவமதித்து விட்டதாகவும், இதனால் கோபமடைந்த தேவி கருமாரியம்மன் சூரியக் கடவுளின் இடம் விட்டகன்றவுடன் சூரியனின் ஜொலிப்பும் பிரகாசமும் மறைந்து உலகம் இருண்டு விட்டதாகவும், பின்னர் சூரியபகவன் அம்மனிடம் மன்னிப்பு கேட்டதாகவும், அதற்கேற்ப வாரத்தின் 7ஆவது நாளை தேவிகருமாரித் தினமாகக் கடைபிடிக்கும்படி அம்மன் கேட்டுக்கொண்டதாகவும் புராணக்கதை உள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 39121).

ஏனைய பதிவுகள்