க.வை.ஆத்மநாத சர்மா (தமிழாக்கம்). திருக்கோணமலை: செல்லையா இராமச்சந்திரன், திருமதி புஸ்பராணி இராமச்சந்திரன், இல. 22, கீழ் வீதி, உவர்மலை, 1வது பதிப்பு, ஆண்டு விபரம் தரப்படவில்லை. (திருக்கோணமலை: ஸ்ரீகணேசா அச்சகம்).
28 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×14 சமீ.
ஆதிபராசக்தியை ஸ்ரீ லலிதாம்பிகை என்ற திருநாமத்தால் வாழ்த்தும் லலிதா ஸஹஸ்ர நாமம் என்னும் வடமொழி நூலினை தமிழில் ஆசிரியப்பாவாக அமைத்து மொழிபெயர்த்தவர் வண்ணார்பண்ணையைச் சேர்ந்த பிரம்மஸ்ரீ க.வை. ஆத்மநாத சர்மா அவர்களாவார். 3.5.1964இல் வண்ணை வைத்தீஸ்வர வித்தியாசாலையில் வெளியிடப்பெற்ற இந்நூலின் போதிய நூலியல் தரவுகளற்ற பின்னய மீள்பதிப்பே இதுவாகும். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 25452).