எம்.எம்.எம். நூறுல்ஹக். சாய்ந்தமருது 5: மருதம் கலை இலக்கிய வட்டம், 129 டீ, ஒஸ்மான் வீதி, 1வது பதிப்பு, ஜனவரி 2009. (கல்முனை: அன்-நூர் பிரின்டர்ஸ்).
xvi, 88 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 22×15 சமீ., ISBN: 978-955-8105-02-3.
ஊடகவியல்துறையில் சிறப்புக் கல்வி பயின்ற எம்.எம்.எம். நூறுல்ஹக் பார்வை, உதயம், சங்கமம், இடி ஆகிய வார இதழ்களின் உதவி ஆசிரியராகவும், முஸ்லிம் குரல் பத்திரிகையின் பிரதி ஆசிரியராகவும், அட்டாளைச்சேனையிலிருந்து வெளிவரும் எழுவான் பத்திரிகையின் பிரதம ஆசிரியராகவும் பணியாற்றியவர். தீவும் தீர்வுகளும் (1988), சிறுபான்மையினர் சில அவதானங்கள் (2002), முஸ்லீம் பூர்வீகம் (2006) ஆகிய மூன்று நூல்களாலும் நன்கு அறியப்பெற்றவர். ஈமானியப் பேரொளிகள் என்ற இந்த இஸ்லாமிய நூலில் முஹம்மது நபி(ஸல்) அவர்கள், அல்லாஹ்வின் தரிசனம், அவுலியாக்கள் ஆகிய மூன்று சுடர்கள் வெளிப்படுத்தப்படுகின்றன. நபி(ஸல்) அல்லாஹ்வின் இறைநேசர்கள், அல்லாஹ்வின் தரிசனம், இவ்வொளிகள் சமூகத்தில் புரையோடியுள்ள சிந்தனைச் சிதறல்களுக்கு அல்குர் ஆன், ஹதீஸ், இஸ்மா, கியாஸ், அடிப்படையிலும் நியாயம், தர்க்கவியல் அடிப்படையிலும் தம் கருத்தை நிலைநாட்டியுள்ளன. முஹம்மது நபி(ஸல்) என்ற பகுதியில் ஆதியும் இறுதியுமான நபி என்ற தலைப்பில் தொடங்கி , ஸலவாத் ஓர் இபாதத் என்ற தலைப்பு ஈறாக பத்து உபதலைப்புகளில் விளக்கி எழுதியுள்ளார்.