ஏ.யூ.முஹம்மது அப்துல் கரீம். கல்முனை: இஸ்லாமிய இலக்கியப் பணிமனை, வில்லா பறகத், சாய்ந்தமருது 3, 1வது பதிப்பு, ஓகஸ்ட் 1978. (கொழும்பு 9: எஸ்.எச்.நிலாப்தீன், I.P.C.Printing Press 320, என்.எம்.எம்.ஈஷாக் மாவத்தை).
(11), 12-108 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 18×12.5 சமீ.
இஸ்லாமிய போதனையை பெருமானாரின் வாழ்க்கை வரலாற்றுடன் இணைத்து இங்கு கவிதைவடிவில் வடித்திருக்கிறார். நபிகள் பெருமான் பிறப்பு, அண்ணல் முஹம்மத் அனாதையாதல், சிந்தனையால் சிறப்படைந்த செம்மல், எழிலரசி கதிஜாவும் ஏந்தலும், வரலாறு கண்ட மணவிழா, நபியென நிரூபணம் பெறல், இறைவன் கட்டளை இறங்குகிறது, இஸ்லாத்தின் இணையற்ற போதனைகள், தொடர்ந்து வந்த துன்பங்கள், அபிசீனியாவில் அடைக்கலம் புகுதல், அபூஜஹில் அடைந்த ஆக்ரோஷம், உமர் இஸ்லாத்தில் சேரல், அபூதாலிபின் மரணம், மலர்க்கொடி கதீஜா மரணம் அடைதல், தாயிபில் பட்ட துயரம், இன்னல் துடைக்கும் இரு மணங்கள், விண்ணேற்றம் கண்ட அண்ணல், நபிகள் மதினா செல்லல், அண்ணல் இல்லத்துள் குறைஷியர், குகையின் அருகில் கொடியோர்கள், அலியாரும் மதீனா சேர்ந்தார், மதலோனைத் தொழுத முதல் பள்ளி, குறைஷியர் யுத்தம் செய்யவந்தனர், இறை கட்டளை மீண்டும் வருகின்றது, பத்றுப் போர்க்களம்-பத்றுப்போர், மரணத்திலும் வாய்மதம், பகைவர் பலம் இழந்தோடினர், வெற்றியில் திளைத்த சத்தியவேந்தர், (ரலி) பாத்திமா திருமணம், உஹத் யுத்தம், அகழியுத்தம், ஹ_தைபிய்யா உடன்படிக்கை, மூத்தாயுத்தம், நபிகளார் மக்கா செல்லல், பேரரசு கண்ட பெருமானார், இறுதி ஹஜ்ஜில் எம்பெருமான், நபி பெருமான் மறைவு ஆகிய தலைப்புகளின் வழியாக கவிஞர் கரீமின் கருத்துச் செறிவான கவிதைகள் விரிந்துள்;ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 23803).