A.M.அபூபக்கர். காத்தான்குடி 03: நவநூர் பப்ளிஷர்ஸ், மெத்தைப்பள்ளி வீதி, 1வது பதிப்பு, ஜுன் 1997.(சாய்ந்தமருது: ஸ்டார் ஓப்செட் பிரின்டர்ஸ்).
xiii, 118 பக்கம், விலை: ரூபா 100., அளவு: 21×14 சமீ., ISBN: 955-9538-00-4.
சமூகத்தில் பாலியல் தொடர்பான புதிய கட்டமைப்புகள் சமூகவியலாளர்களை தீவிரமாகச் சிந்திக்க வைத்திருக்கின்றது. முன்னர் நான்கு சுவருக்குள் புனிதமாகப் போற்றப்பட்டுவந்த கணவன்-மனைவி பாலியல் உறவு இன்று திரையரங்குகளிலும், வீட்டுக்கொன்றாக வண்ணமயமாக காட்சிப்படுத்தும் தொலைக்காட்சிகளிலும் இடம்பெற்று மலினமாக்கப்பட்டு விட்டது. இந்நிலையில் இஸ்லாமிய மார்க்கம் பாலியல் தொடர்பாகக்; கொண்டுள்ள கருத்துக்களைத் திரட்டி இஸ்லாமிய மார்க்கத்தைப் பேணும் ஆண்-பெண் இருபாலாருக்கும் விளக்கும் வகையில், பாலுணர்வும் விபசாரமும், பாலியற்கோட்டமும் இஸ்லாமும், ஆண்-பெண் பாலுறவும் இஸ்லாமும் ஆகிய மூன்று கட்டுரைகளை இந்நூல் கொண்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 17238).