11272 மணம் வீசும் மணிச்சொற்கள்: தொகுதி 2.

எச்.எம்.மின்ஹாஜ். மாதம்பை: இஸ்லாஹிய்யா வெளியீட்டு மையம், 1வது பதிப்பு, ஜனவரி 2013. (கொழும்பு 14: ஐ.பீ.சீ. அச்சகம், 24, டி வாஸ் லேன்).

ix, 168 பக்கம், விலை: ரூபா 220., அளவு: 21×14.5 சமீ., ISBN: 978-955-8966-02-0.

மணம் வீசும் மணிச்சொற்கள் என்ற நபிமொழித் தொகுப்பின் முதலாவது தொகுதி செப்டெம்பர் 2007இல் வெளிவந்தது. இது அத்தொடரின் இரண்டாவது தொகுதியாகும். கல்வியறிவு, அழைப்புப்பணி, பெண்ணுரிமை, சமூக வாழ்வு, இறைதூதரின் பன்முக ஆளுமை பற்றிய இருபத்தைந்து ஹதீஸ்களுக்கான விளக்கங்களை இந்நூல் கொண்டுள்ளது. இவை முன்னர் ‘அல்ஹஸனாத்’ இஸ்லாமிய இலக்கியக் குரலில் மாதாந்தம் வெளிவந்த ஹதீஸ் விளக்கக் கட்டுரைகளின்  தொகுப்பாகும். நபி அவர்களது ஆளுமைப் பண்புகள், சிந்தனைகள், கருத்துக்கள், வழிகாட்டல்கள், தீர்ப்புக்கள், பரிகாரங்கள் பற்றிய ஆழமான புரிதல்களை தமிழ் வாசகர்களுக்கு வழங்கும் நோக்கை இதிலுள்ள 25 கட்டுரைகளும் கொண்டுள்ளன. இந்நூலாசிரியர் அல்ஷெய்க் எச்.எம்.மின்ஹாஜ் (இஸ்லாஹி), புத்தளம் இஸ்லாஹிய்யா பெண்கள் அரபுக் கல்லூரியின் விரிவுரையாளராவார். (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 244932). 

ஏனைய பதிவுகள்

Oko Horusa historia i istotność

Content Istotność egipskiego wzroku Gracz EGIPSKICH TAJEMNIC 🐪 … ? Mit na temat oku Horusa Gdy ciało pozostało odnalezione, stosując swych potencjałów uzdrawiania, próbowała przywrócić