மௌலவி காத்தான்குடி பௌஸ் (ஷர்கி). பாணந்துறை: பாவலர் பண்ணை, 23/6, ஸைனி மன்ஸில், வத்தல்பொல வீதி, 1வது பதிப்பு, ஏப்ரல் 2014. (பாணந்துறை: ஏ4ரு அச்சக இல்லம், 6/1, சுற்றுவட்ட வீதி, ஹேனமுல்லை).
68 பக்கம், விலை: ரூபா 190., அளவு: 18×12.5 சமீ.
அண்ணல் நபியின் அழகிய குணாதிசயங்கள், அச்சம் கொண்ட அமல் செய்யும் ரமழானில் பிச்சை கேட்டு அலைவது இஸ்லாமல்ல என்பன போன்ற இஸ்லாமிய சமூக, மத உணர்வினையும் பக்தியையும் விதைக்கும் பக்தி இலக்கியக் கட்டுரைகள் இவை. எளிய வடிவில் மார்க்க போதனைகளை கட்டுரைகளாக ஆசிரியர் இந்நூலில் தந்திருக்கின்றார். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 54834).