11274 ஷரந்தீபிலிருந்து மஹ்மூத் ஸமி அல் பரூதி.

பண்ணாமத்துக் கவிராயர் (இயற்பெயர்: சய்யத் முகமத் ஃபாரூக்). உக்குவளை 21300: ப்ரவாகம் வெளியீட்டகம், சுதந்திர கலை இலக்கியப் பேரவை,  இல. 9,  மாத்தளை வீதி, 1வது பதிப்பு, ஜனவரி 2002. (உக்குவளை: பரடைஸ் கிராப்பிக்ஸ்).

36 பக்கம், விலை: ரூபா 50., அளவு: 19.5×13.5 சமீ., ISBN: 955-97597-0-1.

பண்ணாமத்துக் கவிராயர் எனப்படும் எஸ். எம். பாரூக் (சய்யத் முகமத் ஃபாரூக்), இலங்கையின் ஒரு முக்கிய கவிஞரும் சிறுகதையாளரும் மொழிபெயர்ப்பாளருமாவார்.

இலங்கையின் மலையகத்தில் மாத்தளையில் பிறந்த இவர் 1960 ஆம் ஆண்டு முதல் ஈழத்துக் கலை இலக்கியத் துறையில் தனது பங்களிப்புகளை வழங்கி வருகிறார். ஒரு பயிற்றப்பட்ட ஆங்கில ஆசிரியராக இலங்கையின் பல பாடாசாலையில் பணிபுரிந்தவர்.

மறைந்த இலங்கையின் எழுத்தாளர் ஏ. ஏ. லத்தீப் நடாத்திய இன்ஸான் பத்திரிகையில் ஈராண்டு பணி புரிந்த இவரின் கவிதைகள், சிறுகதைகள், மொழிபெயர்ப்புக்கள் தாரகை, மலர், பாவை, அக்னி, அலை போன்ற சஞ்சிகைகளிலும், இன்ஸான், செய்தி, தினகரன், வீரகேசரி, திசை, அஷ்ஷ_ரா போன்ற பத்திரிகைகளிலும் வெளிவந்துள்ளன. இவரது ஆங்கிலம் மீதான புலமை காரணமாக அல்லாமா இக்பால், நஸ்ரூல் இஸ்லாம், பைஸ் அகமத் பைஸ் போன்ற முக்கியமான கவிஞர்களினதும் எனப் பல முக்கிய கவிஞர்களினதும், இயக்கங்களினதும் கவிதைகளை தனது மொழிபெயர்ப்பு மூலம் தமிழுக்கு தந்தவர். அக்னி இதழில் வெளிவந்த தாஜ்மஹால் (நவம்பர் 5, 1975) எனும் கவிதையும், அலை சஞ்சிகையில் வெளிவந்த மெயில் பஸ் தம்பதி எனும் சிறுகதையும் இவரது படைப்பாற்றலுக்கான சான்றுகள். காற்றின் மௌனம் ( மொழியாக்கக் கவிதைகள், 1996, மலையக வெளியீட்டகம்), புநநௌளை (மாத்தளை மலரன்பனின் 14 சிறுகதைகளின் மொழிபெயர்ப்பு, கொடகே நிறுவனம், 2014) ஆகிய நூல்களை வழங்கிய இவரது மற்றுமொரு மொழிபயர்ப்புக் கவிதைத் தொகுப்பு இது. கொடகே வாழ்நாள் விருது, 2016 இவரக்கு வழங்கப்பட்டது.  (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 27345).

ஏனைய பதிவுகள்

Wild Panda Slot Opinion

Posts Casino BGO $100 free spins: Sign up for Exclusive Incentives With Your own Account! Fat Panda Review King Of the Nile Opal Edition Totally

17850 வாசிப்பில் நினைந்தூறல்: விமர்சனக் கட்டுரைகள்.

எம்.கே.முருகானந்தன். பருத்தித்துறை: ஜீவநதி வெளியீடு, கலையகம், சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, ஒக்டோபர் 2024. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி). 300 பக்கம், விலை: ரூபா 1200.,