11278 குழந்தைகளுக்கான புதிய சுற்றாடற் கல்வி: ஆண்டு 4.

கு.வி.பதிப்பகம். யாழ்ப்பாணம்: கு.வி.பதிப்பகம், 386 மணிக்கூண்டு வீதி, 1வது பதிப்பு, 1987. (யாழ்ப்பாணம்: கு.வி.அச்சகம்).

(4), 84 பக்கம், விளக்கப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24×18 சமீ.

கல்வி அமைச்சின் பாடவிதான அபிவிருத்தி நிவைலயத்து 1987ஆம் ஆண்டுப் பாடத்திட்டத்தை முழுவதும் தழுவி எழுதப்பெற்ற புதிய பதிப்பு இது. எமது வீடும் அங்கு வசிப்போரும், எமது உணவும் ஊட்டமும், நாம் உடுப்பனவும் அணிவனவும், நமக்கு உதவுவோர், எமது தொழிலுக்குத் துணைபுரிவோர், வேற்றுமையில் ஒற்றுமை, நாம் கேட்பவைகளும் காண்பவைகளும், எமது பாடசாலையும் அதன் சுற்றாடலும், போக்குவரத்து முறைகளும் தொடர்பு முறைகளும், எமது புவியும் அதனைச் சூழ உள்ளவையும், எமது சூழலில் உள்ளவை ஆகிய 11 அலகுகளில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 11215).

ஏனைய பதிவுகள்

15789 மிதுனம் (நாவல்).

குறமகள் (இயற்பெயர்: வள்ளிநாயகி இராமலிங்கம்). கனடா: கனடா தமிழ் எழுத்தாளர் இணையம், 1வது பதிப்பு, தை 2012. (கனடா: விவேகா அச்சகம், 60, Barbados Blvd, #6, Scarborough). 144 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை,