கல்வி வெளியீட்டுத் திணைக்களம். கொழும்பு 10: கல்வி வெளியீட்டுத் திணைக்களம், புதிய செயலகம், மாளிகாவத்தை, 1வது பதிப்பு, 1980. (கொழும்பு: இலங்கை அரசாங்க அச்சகம்).
x, 66 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×13.5 சமீ.
க.பொ.த. சாதாரணதரப் பாடத்திட்டத்துக்கு அமைவாக பத்தாம் தர மாணவர்களுக்காக எழுதப்பட்ட நூல். அபிவிருத்தி பற்றியஅறிவை மாணாக்கருக்குப் புகட்டுதல், அபிவிருத்திக்காக மேற்கொள்ள வேண்டிய ஆக்கபூர்வமான முயற்சிகளில் கவனம் செலுத்துமாறு மாணாக்கரை ஊக்குவித்தல், பொருளாதார அமைப்பும் வெளிநாட்டு உதவியும் பற்றிய தகவலை மாணாக்கர்களுக்கு வழங்குதல் ஆகியன இப்பாடநூலின் பிரதான நோக்கங்கள். இவை அனைத்தும் சர்வதேச வியாபாரம், அன்னிய உதவி, சனத்தொகையும் உலக உணவுப் பிரச்சினையும் ஆகிய மூன்று அத்தியாயங்களில் விளக்கப்பட்டுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 11205).