எம்.ஏ.நுஃமான் (ஆசிரியர்). கொழும்பு 5: சமூக விஞ்ஞானிகள் சங்கம், 425/15, திம்பிரிகஸ்யாய வீதி, 1வது பதிப்பு, டிசம்பர்; 2002. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ், 48B, புளுமெண்டால் வீதி).
126 பக்கம், விலை: ரூபா 100., அளவு: 22×14 சமீ., ISSN: 1391-7269.
கொழும்பு, சமூக விஞ்ஞானிகள் சங்கத்தின் ஆய்வேடாக வருடமிருமுறை வெளிவந்த இவ்விதழின் ஆசிரியர் குழுவில் என்.சண்முகரத்தினம், சித்திரலேகா மௌனகுரு, செல்வி திருச்சந்திரன் ஆகியோர் பணியாற்றினர். இவ்விதழில் சமாதான முயற்சியும் வட-கிழக்கு முஸ்லிம் அரசியலும் (எம்.ஏ.நுஃமான்), தாய்மொழிக் கல்விக்கான நியாயம் (சி.சிவசேகரம்), பின்நவீனத்துவம் ரஷ்யாவுக்கு வந்த பொழுது (விளாடிமீர் பிலென்கின்), சமஷ்டி முறையும் கூட்டுச் சமஷ்டி முறையும் (அம்பலவாணர் சிவராசா), வகுப்புவாதம் உருவாகிவிட்டதா? (இம்தியாஸ் அகமது), அறியாமையின் மோதல் (எட்வேர்ட் சையிட்), இலங்கையில் இடதுசாரி இயக்கம் தோல்வி கண்டுள்ளதா? (செல்வி திருச்சந்திரன்), பூகோளமயமாக்கலும் அதன் விளைவகளும் (மு.சின்னத்தம்பி), பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் அடுத்த இலக்காக பிலிப்பீன்ஸ் (அய்ஜாஸ் அகமது), குட்டித்தேவதை ஒரு வியாக்கியானம் (சித்திரலேகா மௌனகுரு) ஆகிய பத்து ஆக்கங்கள் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 31197).