எம்.ஏ.நுஃமான் (ஆசிரியர்). கொழும்பு 5: சமூக விஞ்ஞானிகள் சங்கம், 12, சுலைமான் ரெறஸ், 1வது பதிப்பு, ஜுலை 2005. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ், 48B, புளுமெண்டால் வீதி).
136 பக்கம், விலை: ரூபா 100., அளவு: 22×14 சமீ., ISSN: 1391-7269.
கொழும்பு, சமூக விஞ்ஞானிகள் சங்கத்தின் ஆய்வேடாக வருடமிருமுறை வெளிவந்த பிரவாதம் இதழ் சிலகாலம் தடைப்பட்டிருந்து மீண்டும் 2005இல் நான்காவது இதழாகத் தொடர்ந்து வெளிவந்துள்ளது. இவ்விதழின் ஆசிரியர் குழுவில் மீண்டும் என்.சண்முகரத்தினம், சித்திரலேகா மௌனகுரு, செல்வி திருச்சந்திரன் ஆகியோர் பணியாற்றினர். இவ்விதழில் எட்வர்ட் சயித் சில குறிப்புகள் (எம்.ஏ.நுஃமான்), பொது வாழ்வில் எழுத்தாளர்களினதும் ஆய்வறிவாளர்களினதும் பங்கு (எட்வர்ட் சயித்), அதிகாரத்திடம் உண்மையைப் பேசுதல், பலஸ்தீனப் பிரச்சினையும் அறிவுத்துறைப் புரட்டல்களும், எட்வர்ட் சயிதின் கீழ்த்திசைவாதம் (சியாஉத்தீன் சர்தார்), மலையகக் குடும்பத் திட்டமிடல் ஒரு மதிப்பீடு (சோபனாதேவி இராஜேந்திரன்), தேசத்தையும் அரசையும் கட்டியெழுப்புதல் (அம்பலவாணர் சிவராஜா), பாப்லொ நெரூடாவின் கவிதைக் கோட்பாடு (எஸ்.வி.ராஜதுரை), சோமதேரர்: அவரது வாழ்வும் மரணமும் (ஜயதேவ உயங்கொட), அரை நூற்றாண்டு காலத்தில் முஸ்லிம் பெண் கல்வி (ஹ.ஜெஸீமா), நூல் மதிப்புரை The Colonial Economy on Track: Roads and Railways in Sri Lanka 1800-1905 (திலகா மெத்தானந்த) ஆகிய பதினொரு ஆக்கங்கள் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 39483).