சி.சந்திரசேகரம் (பிரதம ஆசிரியர்), வ.இன்பமோகன், சு.சிவரெத்தினம் (உதவி ஆசிரியர்கள்). மட்டக்களப்பு: மொழிதல் குழுமம், 110/3, கண்ணகி அம்மன் கோவில் வீதி, 10ஆவது குறுக்கு, 1வது பதிப்பு, ஆவணி 2014. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).
82 பக்கம், விளக்கப்படங்கள், விலை: ரூபா 250., அளவு: 24.5×18 சமீ., ISSN: 2386-1630.
தமிழியல் சமூகவியல் துறைகளில் எழுதப்பெற்ற ஆய்வுக் கட்டுரைகளைத் தாங்கி வெளிவரும் இப் பல்கலை ஆய்விதழ் தனது முதலாவது இதழில், பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி: தமிழ்ப் பண்பாட்டின் அக அமைப்புக்களை நோக்கி (த.முத்துமோகன்), சங்க இலக்கியம்: உணவு உற்பத்தியும் பரிமாற்ற உறவுகளும் (ஞா.ஸ்டீபன்), ஈழத்து எழுத்து மரபுசார் வாய்மொழிப்பாடல் மரபும் அது பற்றிய புரிதல்களும் (சி.சந்திரசேகரம்), விவசாய சமூகத்தில் ஓவியம்: இலங்கையை அடிப்படையாகக் கொண்ட ஆய்வு (சு.சிவரெத்தினம்), சிவத்தம்பியின் புலமைநெறி (பக்தவத்சல பாரதி), மட்டக்களப்பில் மாந்திரீகப் பயில்வு (வடிவேல் இன்பமோகன்), நூல் மதிப்பீடு: எல்லோரும் ஏகலைவர் தாமோ? (சி.ஜெயசங்கர்) ஆகிய ஏழு அறிவியல் ஆய்வுக் கட்டுரைகளை உள்ளடக்கியுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 58453).