வ.இன்பமோகன் (பிரதம ஆசிரியர்), சு.சிவரெத்தினம், சி.சந்திரசேகரம் (உதவி ஆசிரியர்கள்). மட்டக்களப்பு: சுதந்திர ஆய்வு வட்டம், 110ஃ3, கண்ணகி அம்மன் கோவில் வீதி, 10ஆவது குறுக்கு, 1வது பதிப்பு, ஆனி 2015. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).
(4), 76 பக்கம், விலை: ரூபா 250., அளவு: 24.5×18 சமீ., ISSN: 2386-1630.
தமிழியல் சமூகவியல் துறைகளில் எழுதப்பெற்ற ஆய்வுக் கட்டுரைகளைத் தாங்கி வெளிவரும் இப் பல்கலை ஆய்விதழ் தனது இரண்டாவது இதழில், மக்களின் மொழியும் மரபின் மொழியும் மொழியின் நவீனமாதலும் (சி.சிவசேகரம்), பண்பாட்டு ஆய்வுகளில் கற்பனை, நினைவுகள் மற்றும் பிரதேச உணர்வு (ந.முத்துமோகன்- ஆங்கில மூலம், இந்திரா மோகன்- தமிழாக்கம்), மட்டக்களப்பில் நாகரின் பண்பாட்டுச் சின்னங்கள் (சி.பத்மநாதன்), சிகிரியா ஓவியம்: மறைக்கப்பட்ட தமிழர் வரலாறும் அதன் அழகியலும் (சு.சிவரெத்தினம்), தத்துவ அரசியலும் தமிழ்ப் புலவர்களும் (ச.முகுந்தன்), தமிழ் இலக்கிய வரலாற்றில் பொருட்படுத்தப்படாத பெண்புலவர்கள் (செ.யோகராசா), ஈழத்துக் கண்ணகை அம்மன் இலக்கியங்கள்: இலக்கிய மீளுருவாக்கம் பற்றிய ஆய்வு (சி.சந்திரசேகரம்) ஆகிய ஏழு ஆய்வுக் கட்டுரைகளை உள்ளடக்கியுள்ளது.