சு.சிவரெத்தினம் (பிரதம ஆசிரியர்), வ.இன்பமோகன், சி.சந்திரசேகரம் (உதவி ஆசிரியர்கள்). மட்டக்களப்பு: சுதந்திர ஆய்வு வட்டம், 110/3, கண்ணகி அம்மன் கோவில் வீதி, 10ஆவது குறுக்கு, 1வது பதிப்பு, மார்கழி 2015. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).
(4), 100 பக்கம், விலை: ரூபா 250., அளவு: 25×17.5 சமீ., ISSN: 2386-1630.
தமிழியல் சமூகவியல் துறைகளில் எழுதப்பெற்ற ஆய்வுக் கட்டுரைகளைத் தாங்கி வெளிவரும் இப் பல்கலை ஆய்விதழ் தனது மூன்றாவது இதழில், தமிழ்ச் சிந்தனை மரபில் அகப்பண்பாட்டு வெளியும் பெண்ணும் (இ.முத்தையா), உயர் கல்வியைச் சிதைக்கும் உபாயங்கள் (சி.சிவசேகரம்), பின்னைக் காலனியமும் இந்திய தத்துவங்களும் (ந.முத்துமோகன்- ஆங்கில மூலம், இந்திரா மோகன்- தமிழாக்கம்), வங்கக்கடல் புவிநடுக்க அதிர்வுகள் இலங்கையில் எற்படுத்தக்கூடிய தாக்கம் (இராஜரெட்ணம் கிருபராஜா), தமிழர் பண்பாட்டில் தொல் வாத்தியங்கள் (வடிவேல் இன்பமோகன்) ஆகிய ஐந்து ஆய்வுக் கட்டுரைகளை உள்ளடக்கியுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 61119).