11289 மட்டக்களப்புத் தமிழர் பண்பாட்டு மரபுகள்.

சாமித்தம்பி தில்லைநாதன். கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2015. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).

xvi, 358 பக்கம், விலை: ரூபா 975.00, அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-955-659-480-5.

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கலாநிதிப் பட்டத்திற்குச் சமர்ப்பிப்பதற்காக உருவாக்கப்பட்ட  இவ்வாய்வு விரிவாக்கப்பட்டு, மெருகூட்டப்பெற்று நூல்வடிவில் வழங்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு-ஓர் அறிமுகம் (மட்டக்களப்பின் வரலாற்றுப் பின்னணி, மட்டக்களப்பில் நிலவிய ஆட்சிகள், இலங்கை வரலாற்றில் மட்டக்களப்புத் தமிழரது இடம், மட்டக்களப்பின் வரலாற்று ஆதாரங்களான கல்வெட்டுக்கள், குலங்களும் குடிகளும்), சமயப் பண்பாடுகள் (மட்டக்களப்பில் சைவ சமயம், புராதன சைவ ஆலய நடைமுறைகள், சைவ மக்களிடையே காணப்பட்ட நம்பிக்கைகள், கிறிஸ்தவ சமயம்), சமூகப் பண்பாடுகள் (சமூக வழமைகள், உணவும் விருந்துபசாரமும், குடிமனைகள், பாவனைப் பொருட்கள், கல்வி முறை, ஆடையும் ஆபரணமும், தொழில்களும் போக்குவரத்தும்), சமூகச் சடங்குகள் (சனனச் சடங்கு, சாமர்த்தியச் சடங்கு, திருமணச் சடங்கு, மரணச் சடங்கு), கலைகள் (கூத்து, வசந்தன் ஆட்டம், கரகாட்டம், இசைகள், விளையாட்டுக்கள், மகிடி நாடகம், மருத்துவம், கட்டடக் கலையும் கண்கவர் கலையும், ஓலைச் சுவடியாக்கல்), தமிழ் மொழியும் இலக்கியமும் (தமிழ் மொழி வழக்கு, இலக்கியங்கள், தமிழ் வளர்த்த பெரியார்கள்), முடிவுரை ஆகிய ஏழு இயல்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது.

ஏனைய பதிவுகள்