11290 கட்டுடைக்கும் பெண்: பெண் படைப்புகளின் தொகுப்பு.

றஞ்சி சுவிஸ், மேகலா, காசினி (தொகுப்பாளர்கள்). சுவிட்சர்லாந்து: யோகாம்பிகை எழுத்தகம், சுரஅறைநப 40இ 4900 டுயபெநவொயட, 1வது பதிப்பு, 2011. (சென்னை 5: புலம் பதிப்பகம்).

144 பக்கம், விலை: இந்திய ரூபா 70., அளவு: 21×13.5 சமீ.

1985இலிருந்து சுமார் 25 ஆண்டுகள் சுவிட்சர்லாந்தில் வாழ்ந்து மறைந்த பெண்ணியலாளர் அமரர் திருமதி யோகா யோகாம்பிகை (1955-2010) அவர்களின் முதலாம் ஆண்டு நினைவாக வெளிவரும் நூல் இது. பெண் படைப்பாளர்களால் பெண்நிலை நோக்கில் நின்று எழுதப்பட்ட பலவினப் படைப்பாக்கங்களின் தொகுப்பு இது.  எங்கே போகிறோம் (த.எலிசபெத்), குசயஅந (பெண்ணியா), ஓர் இரவு (மயூ மனோ), பாடம் (கிண்ணியா எஸ்.பாயிஸா அலி), வியர்வையின் விலை (வெலிகம ரிம்சா முஹம்மத்), இன்பமின்றி வேறு இனி ஏது (தியத்தலாவ எச்.எப்.ரிஸ்னா), வாழ்தலில் (மயூ மனோ), பச்சைப் பசும் புல்வெளி (கிண்ணியா எஸ்.பாயிஸா அலி), இனி என் குழந்தைகளுக்குப் பெயரில்லை (நிலா- தர்ஷாயின்), ஓர் ஊமையின் பாடல் (வெலிகம ரிம்ஸா முஹம்மத்), வெள்ளைச் சிரிப்பினிலே (கிண்ணியா எஸ்.பாயிஸா அலி), வசீகர மொழிகாவி (கிண்ணியா எஸ்.பாயிஸா அலி),  மீள வாசிக்கப்படும் வாசிக்கப்படாத மொழி (மயூ மனோ), ஆகிய கவிதைகளையும், மூளாத் தீ (ஜெயரஞ்சினி ஞானதாஸ்) என்ற நாடக எழுத்துருவையும், தாய்லாந்தின் புன்னகை அரசிகள் (சாந்தி), கணவனுக்கு எழுத முடியாத கடிதம் (குடும்ப மாது), உடலரசியலும் பெண்ணும் (புதிய மாதவி), பூவும் பொட்டும் (யாழ்.தர்மினி பத்மநாதன்), சந்திரலேகா கிங்ஸ்லியுடன் ஓர் நேர்காணல் (றஞ்சி சுவிஸ்), ஜான் தெரொய்ன்: பெண்களையும் அரசியல் பேசவிடுங்கள் (தமிழச்சி), ஆகிய கட்டுரைகளையும், மேற்கு வாசற்படிகள் (பத்மபிரபா), காகம் (நிலா-தர்ஷாயினி), கனவுகள் மறுக்கப்பட்ட நிஜங்கள் (மாதவி சிவலீலன்), உலோக ஆடை (சி.அமுதன்), புசழளள ஆரவவநச ஃஅம்மம்மா (ஆனந்தி சுரேஷ்), கண்ணீர் தீயாகிறது (தியத்தலாவ எச்.எப்.ரிஸ்னா), நிழலும் நிஜமும் (பாமா), ஆகிய சிறுகதைகளையும் இத்தொகுப்பு உள்ளடக்குகின்றது.

ஏனைய பதிவுகள்