11291 நேர்கொண்ட பாவை.

கோகிலா மகேந்திரன். தெல்லிப்பழை: கலை இலக்கியக்கள வெளியீடு, 1வது பதிப்பு, ஜுலை 2015. (இணுவில்: அம்மா அச்சகம்).

xiv, 236 பக்கம், விளக்கப்படங்கள், விலை: ரூபா 500., அளவு: 20×14.5 சமீ., ISBN: 978-955-51147-7-9.

ஒரு பெண்குழந்தை முதன்முதலாகத் தாயின் கருவறையில் உதிப்பது முதல் அவளது மரணம் வரையிலான படிமுறைகளை 42 படிநிலைகளாக வகுத்து ஒவ்வொரு படிநிலையையும் கருத்தாழத்துடன் விரிவாக விபரித்து பெண்ணின் வாழ்க்கை முறையையும், அவள் எவ்வாறு நம்பிக்கை கொண்டவளாகவும் தன் வாழ்வில் ஏற்படும் மாற்றங்களை எவ்வாறு ஏற்றுக்கொண்டு வாழ்ந்து மறைகிறாள் என்பதையும் விளக்கியுள்ளார். ஒவ்வொரு தலைப்பின்கீழும் பொருத்தமான பாடல்வரிகள் சேர்க்கப்பட்டுள்ளன. இடையிடையே புராணக் கதைகள், பாடல் வரிகள் என்பவற்றைச் செருகி நூலை ஆர்வத்துடன் வாசிக்கவைத்திருக்கிறார். எந்தெந்த வயதில் பெண் குழந்தைகளை எவ்வாறு அணுகவேண்டும், எந்தெந்த வயதில் பெண்களின் மனோநிலை எவ்வாறு இருக்கும், சிறுவயதில் தாய் கூறும் அறிவுரைகள் பெண்பிள்ளைகளிடம் எத்தகைய பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன, பெண்ணின் பார்வையில் சமூகத்தின் நோக்கு தான் எப்படி நடந்துகொள்ளவேண்டும் என்ற தீர்மானத்தை எடுக்கும் தருணத்தில் தாயின் ஆலோசனகள் ஏற்படுத்தும் உளவியல் பாதிப்பு என்பன பற்றியெல்லாம் சமூக உளவியல்நோக்கில் இந்நூல் 42 இயல்களில் ஆராய்ந்துள்ளது.

ஏனைய பதிவுகள்

13543 பல்லவி அமுதம் (இசைத் தட்டுடன்).

க.ப.சின்னராசா (இயற்றியவர்), தவநாதன் றொபேட் (ஸ்வர அமைப்பு). சென்னை 600 017: மணிமேகலைப் பிரசுரம், தபால் பெட்டி எண் 1447, 7(ப.எண் 4), தணிகாசலம் சாலை, தியாகராய நகர், 1வது பதிப்பு, 2005. (சென்னை