நவஜோதி ஜோகரட்ணம். லண்டன்: அகஸ்தியர் வெளியீடு, 1வது பதிப்பு, மே 2016. (சென்னை 5: கருப்பு பிரதிகள்).
296 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×14 சமீ., ISBN: 0-9547998-2-8.
லண்டன் சன்ரைஸ் வானொலியில்; ஆசிரியர் மேற்கொண்ட நேர்காணல்களின் தொகுப்பு. இதில், இசைத்துறையில் ஈடுபட்டுவரும் தையல்சுந்தரம் பரந்தாமன், சரஸ்வதி பாக்கியராஜா, அம்பிகா தாமோதரம், மாதினி சிறீக்கந்தராஜா, சிவசக்தி சிவநேசன், பொன்னையா ஜெயஅழகி, துஷி-தனு சகோதரிகள் ஆகியோரின் உரையாடல்களும், நாட்டியத்துறையில் ஈடுபட்டுவரும் நளாயினி ராஜதுரை, விஜயாம்பிகை இந்திரகுமார், ராகினி ராஜகோபால், ஜெயந்தி யோகராஜா, பிரேமளா ரவீந்திரன் ஆகியோரின் உரையாடல்களும், நாடகத்துறையில் ஈடுபடும் ஆனந்தராணி பாலேந்திரா, ரோகினி சிவபாலன் ஆகியோரின் உரையாடல்களும், ஓவியத்துறையில் பிரபல்யமான அருந்ததி இரட்ணராஜா, மைதிலி தெய்வேந்திரம்பிள்ளை ஆகியோரின் உரையாடல்களும், இலக்கியத்துறையில் பிரபல்யமான ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம், புனிதா பேரின்பராஜா, தமிழரசி சிவபாதசுந்தரம், யமுனா தர்மேந்திரன், றீற்றா பற்றிமாகரன், மாதவி சிவலீலன், உதயகுமாரி பரமலிங்கம் (நிலா) ஆகியோரின் உரையாடல்களும், அரசியல்துறையில் பரிணமித்த மங்கையர்க்கரசி அமிர்தலிங்கம், நிர்மலா ராஜசிங்கம், ரதி அழகரட்ணம், சசிகலா சுரேஷ்குமார், ஆகியோரின் உரையாடல்களும், மருத்துவ நிபுணர்களான மாலா ராதாகிருஷ்ணன், மீனாள் நித்தியானந்தன், ஜெயானி நிர்மலன், வசந்தி கோபிநாத் ஆகியோரின் உரையாடல்களும், தொழிலதிபர்களான சுவர்ணா நவரட்ணம், ராஜேஸ்வரி சிவம் ஆகியோரின் உரையாடல்களுமாக மொத்தம் 33 பிரமுகர்களின் நேர்காணல்களின் எழுத்துருக்கள் இந்நூலில் பதிவுக்குள்ளாகியுள்ளன.