எம்.ஏ.எம். பௌசர். கொழும்பு 9: இஸ்லாமிய புத்தக இல்லம், Islamic Book House, தெமட்டகொட வீதி, மருதானை, 1வது பதிப்பு, 2012. (ஐ.பீ.எச். பப்ளிக்கேஷன், 77 தெமட்டகொட வீதி, மருதானை).
134 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 21.5×15 சமீ., ISBN: 978-955-0687-25-1.
முஹம்மட் அனிபா முஹம்மட் பௌசர் இலங்கைத் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சமூக விஞஞானத் துறையின் கீழ் இயங்கும் அரசியல், சமாதானக் கற்கைகள் பிரிவில் உதவி விரிவுரையாளராகப் பணியாற்றுகிறார். அரசியல் விஞ்ஞானச் சிறப்புப் பட்டதாரியான இவர் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் தனது முதுமானிக் கற்கை நெறியினை மேற்கொண்டு வருகின்றார். சமாதானக் கற்கைகளுக்கான நிலையத்தினால் நடத்தப்படும் முரண்பாடு தீர்த்தல் மற்றும் சமாதானத்திற்கு தயார்படுத்தல் டிப்ளோமா கற்கைநெறியினைப் பூர்த்திசெய்த நூலாசிரியர் கொழும்புப் பல்கலைக்கழகத்தின் சட்டபீடத்தினால் வழங்கப்படும் மனித உரிமைகள் மற்றும் சமாதானக் கற்கைகள் தொலைக்கல்வி டிப்ளோமாவினையும் பயின்று வருகிறார். அரசியல் விஞ்ஞான ஆய்விலும் கற்பித்தலிலும் மிகுந்த ஆர்வமுள்ள இவர் உயர்தர வகுப்பு மாணவர்களுக்கு அரசியல் விஞ்ஞானத்தைப் போதிப்பதில் சுமார் 8 வருட கால அனுபவத்தைப் பெற்றிருந்த நிலையில் இந்நூலை எழுதியிருக்கிறார். (இந்நூல் கொக்குவில் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் ஆர்:- 12748).