ஜயதேவ உயன்கொட (ஆங்கில மூலம்), க.சண்முகலிங்கம் (தமிழாக்கம்). கொழும்பு 4: க.சண்முகலிங்கம், 312, 5/3, ஹவ்லக் வீதி, 1வது பதிப்பு, 2016. (கொழும்பு 6: ஹரே பிரின்டர்ஸ்).
60 பக்கம், விலை: ரூபா 250., அளவு: 20×14.5 சமீ.
இலங்கை அரசுக்கு எதிரான ஆயுதம் தாங்கிய போராட்டங்கள் நடைபெற்றவேளையில் இலங்கை அரசு ஜனநாயக முறையை முற்றாகத் தூக்கிவீசிவிட்டு சர்வாதிகார அரசாக அல்லவா மாறியிருக்கவேண்டும்? இதுவல்லவா சாதாரணமாக எதிர்பார்க்கக்கூடியது? ஆனால் இலங்கையில் ஜனநாயகம் உயிரோடு இன்றும் இருக்கின்றது. இது எவ்வாறு சாத்தியமாயிற்று என்ற புதிரை விடுவிப்பதே தனது ஆய்வின் நோக்கமென பேராசிரியர் உயன்கொட குறிப்பிடுகிறார். இலங்கையின் பின்காலனித்துவ அரசு தனது ஜனநாயக வடிவத்தை நெகிழ்ச்சியுடையதாக்கி அதனுள்ளே சர்வாதிகார நடைமுறைகளையும் இணைத்துக்கொண்டுள்ளது. இந்த அரசு சில திருத்தங்களையும் மாற்றங்களையும் செய்து ஜனநாயகத்தைத் தன்னுடன் வைத்துக்கொண்டது. அதனை முற்றாகத் தூக்கி வீசவில்லை. ஜனநாயகத்தின் நெகிழ்வுத் தன்மை காரணமாக இலங்கையில் சர்வாதிகாரம் ஜனநாயத்தோடு இணைந்து கொண்டது. ஜனநாயக நடைமுறைகளை உள்வாங்கிக் கொண்டு சமரசம் செய்துகொண்ட சர்வாதிகார அரசே இலங்கையில் இன்று நிலைபெற்றுள்ளது என்று நூலாசிரியர் முடிவுசெய்கின்றார். இலங்கையில் ஜனநாயகத்தை மீளவும் உயிர்ப்பிக்கக்கூடியஅமைப்பில் மாற்றங்களைச் செய்வதை இந்தச் சர்வாதிகார அரசு அனுமதிக்க மாட்டாது என்றும் குறிப்பிடுகிறார்.