அ.விசுவநாதன். யாழ்ப்பாணம்: அ.விசுவநாதன், 91, கண்டி வீதி, 2வது திருத்திய பதிப்பு, மார்கழி 1967, 1வது பதிப்பு, ஆடி 1962. (யாழ்ப்பாணம்: ஸ்ரீ லங்கா அச்சகம், 234, காங்கேசன்துறை வீதி).
xvi, 257-504 பக்கம், விலை: ரூபா 4.00, அளவு: 21×14 சமீ.
இந்நூல் பொதுத் தராதர வகுப்புக்கும் சர்வகலாசாலைப் பிரவேச வகுப்புக்கும் உரியது. இவ்விரண்டாம் பாகத்தில் இயல்கள் 9 முதல் 14 வரை இடம்பெற்றுள்ளன. ஜனநாயகப் பாதையிலே இலங்கை (அரசியல் வளர்ச்சி 1796-1931/டொனமூர் அரசியல் சட்டம்/ டொனமூர் அரசியல் சட்டத்திற்குப் பின்), சுதந்திர இலங்கை (டொமினியன் அல்லது ஆணிலப்பத அந்தஸ்து/வாக்குரிமை பிரஜாவுரிமை/தொகுதிகள்/இலங்கைப் பாராளுமனறம்/அரசியல்கட்சி முறை/மந்திரிசபை முறை/பாராளுமன்றம் அதனதிகாரம்), அரசாங்க நிர்வாகம், நீதி பரிபாலனம், தலதாபன அரசாங்கம், சில அரசியல் பிரச்சினைகள்(அரசியல் சட்டம் திருத்தப்பட வேண்டுமா?/ குடியரசா முடியரசா?/ மேல்சபை இருத்தல் வேண்டுமா?/ நியமன உறுப்பினர்/29ஆவது விதியும் அரசியல் சட்டத் திருத்தமும்/அடிப்படை உரிமைகள்/இலங்கையில் பாராளுமன்ற ஜனநாயகம் நிலைத்துவிட்டதா?/ஒற்றை ஆட்சியா சமஷ்டி ஆட்சியா?) ஆகிய பாடங்கள் இந்நூலில் விபரிக்கப்பட்டுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 14056).