11302 ஜனநாயகமும் மனித உரிமைகளும்: கட்டுரைத் தொகுப்பு.

வி.ரி.தமிழ்மாறன். கொழும்பு 8: மதுரி மலர்வகம், பூங்கா வீதி, 1வது பதிப்பு, டிசம்பர் 2010. (கொழும்பு 12: லங்கா புத்தகசாலை, F.L.1/14 டயஸ் பிளேஸ், குணசிங்கபுர).

200 பக்கம், விலை: ரூபா 400., அளவு: 21×15 சமீ., ISBN: 978-955-1162-34-4.

நூலாசிரியர் கொழும்புப் பல்கலைக்கழகத்தின் சட்டபீடத்தின் பொது மற்றும் சர்வதேச சட்டத்துறைத் தலைவராகப் பணியாற்றுகிறார். மனித உரைமைகள் சார்ந்த ஒன்பது கட்டுரைகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. 21ஆம் நூற்றாண்டில் அரசுகளுக்கான சவால்கள்: ஓர் உரிமையியற் கண்ணோட்டம், மனித உரிமைகளும் சுயநிர்ணய உரிமையும்: சர்வதேசச் சட்ட நோக்கு, தனிமனித உரிமைகளும் சிறுபான்மையினர் உரிமைகளும்: தெளிவும் தேவையும், மனித உரிமைகளும் மதமாற்றத்தை விளங்கிக்கொள்ளலும்;: ஒரு சட்ட நோக்கு, மனித உரிமைகளின் பாதுகாப்பும் நீதித்துறைக்கு வலுவூட்டலும், மேற்கை விஞ்சிய கிழக்கு: கிரேக்கத்தை விஞ்சிய இந்திய அரசியற் தத்துவங்கள், இந்து மதமும் சர்வதேசச் சட்டமும், திருக்குறளில் நீதி எனும் எண்ணக்கரு, மனித உரிமைகள் கல்வி: வழிகாட்டியா அல்லது வாழ்க்கையா?ஆகிய தலைப்புகளில் இக்கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளன. (இந்நூல் கொக்குவில் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் ஆர்:- 14801).

ஏனைய பதிவுகள்

10 Gratisbonus Im Prince Ali Casino

Content Deine Glückssträhne Beginnt Via Diesem Casino Prämie Durch Stake Nun Unter einsatz von 50 Freispielen Abzüglich Einzahlung Im Ggbet Kasino Initialisieren Nur, Falls Du