செல்வரத்தினம் சந்திரசேகரம். கொழும்பு 11: சேமமடு பொத்தகசாலை, U.G.50, Peoples Park, 1வது பதிப்பு, 2013. (கொழும்பு 11: சேமமடு பதிப்பகம்).
xv, 200 பக்கம், விலை: ரூபா 500., அளவு: 21×14.5 சமீ., ISBN: 978-955-685-022-2.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பொருளியல்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் செ.சந்திரசேகரம் தென்னாசிய சமூகங்களின் விருத்தியை ஒப்பியல் நோக்கில் புரிந்துகொள்ளும் வகையில் இந்நூலை வழங்கியுள்ளார். அரசியல் சுதந்திரமும் பொருளாதார அபிவிருத்தியும், பொருளாதார அபிவிருத்தியில் சிங்கப்பூரும் இலங்கையும்: இலங்கை பற்றிய லீ குவான் யூவின் குறிப்புகள், இன ஒற்றுமைக்கு சிங்கப்பூரிடம் இலங்கை கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள், சிங்கப்பூரின் பொருளாதார அபிவிருத்தியும் அவற்றின் மூலங்களும், நல்லாட்சியும் பொருளாதார அபிவிருத்தியும், சிங்கப்பூரின் அரசியல் தலைமைத்துவமும் பொருளாதார அபிவிருத்தியும்: லீ குவான் யூ பற்றிய ஒரு பார்வை, சமூக நலன்புரிக் கொள்கைகளும் அபிவிருத்தியும் ஆகிய ஏழு இயல்களின் வாயிலாக சமகாலச் சூழலில் முக்கியத்துவம் மிக்கதான பல விடயங்கள் பேசப்பட்டுள்ளன. இங்கு பேசப்பட்டுள்ள விடயங்கள் சிங்கப்பூர்- இலங்கை முதலான நாடுகளை பொருத்தப்பாடுகளுடன் நோக்குவதற்கான சிந்தனை பின்புலங்களை வழங்குகின்றது. (இந்நூல் இலங்கைத் தேசிய நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 1001416).