11307 பொருளாதார சிந்தனை வரலாறு.

செல்வரத்தினம் சந்திரசேகரம். யாழ்ப்பாணம்: அபி பதிப்பகம், 196/23, தலுவில் ஒழுங்கை, நவாலி வடக்கு, மானிப்பாய், 1வது பதிப்பு, 2013. (யாழ்ப்பாணம்: கங்கை பிறின்டேர்ஸ், காங்கேசன்துறை வீதி).

iv, 222 பக்கம், விலை: ரூபா 500., அளவு: 20.5×14.5 சமீ., ISBN: 978-955-44890-0-4.

பொருளாதார சிந்தனை வரலாறு: ஓர் அறிமுகம், புராதன பொருளாதாரச் சிந்தனை வரலாறு, வணிகவாதம், இயற்கைவாதம், அடம்ஸ் ஸ்மித், தோமஸ் ரொபர்ட் மல்தூஸ், டேவிட் ரிக்கார்டோ, ஜே.பி.சே., ஜே.எஸ்.மில், பழம் பொருளியலின் எதிர்முனை, கார்ள் மார்க்ஸ், ஜோன் மேனார்ட் கெயின்ஸ் ஆகிய 12 அத்தியாயங்களில் உலகின் பொருளாதார சிந்தனை வரலாறுகள் விபரிக்கப்பட்டுள்ளன. பொருளியல்துறையின் சிரேஷ்ட விரிவுரையாளரான நூலாசிரியரின் இந்நூல், பொருளியலைக் கற்பிப்பவர்களுக்கும், அதனை ஒரு பாடமாகக் கற்பவர்களுக்கும் மிகப்பயனுடையது. ஆங்கிலத்தில் எழுதப்பெற்ற பொருளாதார வரலாறுகளையும் அவைசார்ந்த பொருளியலாளர்களின் சிந்தனைகளையும் தெளிவாகக் கற்று, தமிழில் தனது பார்வையில் தொகுத்து வழங்கியிருக்கிறார். (இந்நூல் இலங்கைத் தேசிய நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 1001422). 

ஏனைய பதிவுகள்