11308 பொருளாதார முறைமைகள் G.C.E. A/L.

வே.கருணாகரன். யாழ்ப்பாணம்:  கே.தனேஸ்வரன், இல. 101, சட்டநாதர் வீதி, நல்லூர், 1வது பதிப்பு, ஏப்ரல் 2009. (யாழ்ப்பாணம்;: மதி கலர்ஸ், முருகேசர் ஒழுங்கை, நல்லூர்).

xiv, 104 பக்கம், விளக்கப்படங்கள், வரைபடங்கள், அட்டவணைகள், விலை: ரூபா 150., அளவு: 20.5×14.5 சமீ.

சுயமாகக் கற்கக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்நூல் மூன்று அடிப்படைப் பொருளாதாரப் பிரச்சினைகள், பொருளாதார முறைமைகள், சந்தைப் பொருளாதாரங்கள், கட்டளைப் பொருளாதாரங்கள், கலப்புப் பொருளாதாரம், மாறுநிலைப் பொருளாதாரங்கள் ஆகிய ஆறு பகுதிகளின்கீழ் எழுதப்பட்டுள்ளது. ஒவ்வொரு பகுதியின் ஆரம்பத்திலும் அவ்வப்பகுதியில் கற்கப்போகும் விடயத் தலைப்புகள் இலக்க ஒழுங்கில் தரப்பட்டுள்ளன. நூலின் இறுதியில் 1973ஆம் ஆண்டிலிருந்து வெளிவந்த கடந்தகாலப் பரீட்சை வினாக்கள் உள்ளிட்ட பயிற்சி வினாக்கள், பல்தேர்வு வினாக்கள், கட்டமைப்பு வினாக்கள் என்ற இரு பகுதிகளாகத் தொகுத்து வழங்கப்பட்டுள்ளன. பல்தேர்வு வினாக்களுக்குரிய விடைகள் நூலின் இறுதியில் தரப்பட்டுள்ளன. (இந்நூல் கொக்குவில் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் எல்:- 10494). 

ஏனைய பதிவுகள்

Pay By Mobile Casino Uk

Content Pay By Phone Casinos Pros and Cons List Of Free Spins No Deposit Casinos For July 2024 And 300 Free Spins What Users Say