11310 பொருளியல்: பகுதி 1: பொருளாதாரமொன்றின் அறிமுகம்.

எஸ்.ஸ்ரீராம். கொழும்பு 13: எஸ்.ஸ்ரீராம், 111 கல்லூரி வீதி, முதலாவது பதிப்பு, மார்ச் 2011. (கொழும்பு 12: லங்கா புத்தகசாலை, F.L.1/14 டயஸ் பிளேஸ், குணசிங்கபுர).

viii, 405 பக்கம், வரைபடங்கள், அட்டவணைகள், விலை: ரூபா 490., அளவு: 21.5×14.5 சமீ.

2009இலிருந்து அமுல் படுத்தப்பட்ட புதிய பாடத்திட்டத்திற்கேற்ப 2011இலிருந்து பரீட்சைக்குத் தோற்றுவோருக்கான கைநூல். இந்நூலை 18 அலகுகளாகப் பிரித்து தேவையான குறிப்புகளையும் வினா-விடைகளையும் உள்ளடக்கியுள்ளதோடு மேலதிகப் பொருளியல் விடயங்களை பெட்டிக்குறிப்புகளாகவும் தந்துள்ளார். பொருளியல் அறிஞர்கள், சில பொருளியல் பதங்கள், வளப்பற்றாக்குறையும் வளப்பயன்பாடும், இலவசப் பண்டமும் பொருளியல் பண்டமும், அமையச் செலவு, பொருளியல் இலாபம் கணக்கியல் இலாபம், சர்வதேச வர்த்தகமும் அமையச் செலவும், பொருளாதார அடிப்படை பிரச்சினைகள், விலை-பொறிமுறை, மத்திய திட்டமிடல் குழு, பொருளாதார முறைமைகள், அரசாங்க தோல்வி, சந்தைத் தோல்வி, மாறுநிலைப் பொருளாதாரங்கள், உற்பத்தி வளங்கள், சந்தை, பொதுப் பண்டமும் தனியார் பண்டமும், மாறிகள், உற்பத்தி சாத்திய வளையி ஆகிய 18 அலகுகளில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது.  (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 49921).

ஏனைய பதிவுகள்

13275 பனுவல்: சமூக பண்பாட்டு விசாரணை(இதழ் 2-2004)

கசங்க பெரேரா (ஆசிரியர்), தா.சனாதனன் (பிரதான தொகுப்பாசிரியர்). கொழும்பு 8: சமூக பண்பாட்டு விசாரணைக்கான கூட்டிணைப்பு, 119A, கிங்ஸ் வீதி, 1வது பதிப்பு, 2004. (யாழ்ப்பாணம்: கரிகணன் பிரிண்டர்ஸ், 424A , காங்கேசன்துறை வீதி).

17663 கிரவுஞ்சி கதைகள்.

மனோ சின்னத்துரை (இயற்பெயர்: சின்னத்துரை மனோகரன்). சென்னை 600 005: கருப்புப் பிரதிகள், பி 55, பப்பு மஸ்தான் தர்கா, லாயிட்ஸ் சாலை, 1வது பதிப்பு, ஏப்ரல் 2024. (சென்னை 600005: ஜோதி என்டர்பிரைசஸ்).

17768 குலைமுறிசல்.

ஜே.வஹாப்தீன். ஒலுவில் 3: தமிழ்ச் சங்கம், இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகம், 64, பழைய தபாலக வீதி, 1வது பதிப்பு, நவம்பர் 2016. (அக்கரைப்பற்று: பெஸ்ட் பிரின்ட்). viii, 166 பக்கம், விலை: ரூபா 300.,